
ஆனால் தொடர்புகள் (Contacts) பற்றிய விவரங்களை அறிய ஒவ்வொரு முறையும் நீங்கள் ஜிமெயில் உள்ளே லாகின் செய்து பெற வேண்டி இருக்கும். இது சலிப்பான விஷயம். இந்த சலிப்பை போக்கும் தனி வசதியாக Google Contacts கிடைக்கிறது.
Google Contacts ஐ இந்த லின்க்கில் அணுகலாம். இதில் Family, Friends, Co Workers என பல குழுக்களாக பிரித்து உங்கள் தொடர்புகளின் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண்கள், ஈமெயில் மற்றும் குறிப்புகளை சேமிக்க முடியும். Yahoo, MSN, Outlook போன்றவற்றில் உங்கள் தொடர்புகளை உபயோகித்து கொள்ள வசதியாக Export செய்து கொள்ளவும் முடியும். தொடர்புகளுக்குள் தேடல், பிரிண்ட் எடுத்து கொள்ளுதல் முதலான வசதியும் உண்டு.
Google Contacts உபயோகியுங்கள். உங்கள் தொடர்புகளை தொலைத்து விடாமல் இணையத்தில் நிரந்தரமாக சேமித்து வையுங்கள்.
3 comments:
பதிவ படிச்சு ஓட்டும் போட்டாச்சு
useful tips
useful post thanks.
Post a Comment