
என் பிளாக்குக்கு டிராபிக் பெறுவதற்காக நான் தேர்ந்தெடுத்த இணையதளங்கள் தமிழ்மணம், தமிழிஷ் , தட்ஸ்தமிழ் புக்மார்க் . பிளாக்கின் இடுகைகளை தானாகவே இணைத்து கொண்ட தளங்கள் யூத்புல்விகடன் , திரட்டி.
தமிழிஷில் இடுகைகளை வாசித்து கொண்டிருந்த எனக்கு, தமிழ் பிளாக் உலகில் முதன்மையான பிளாக்காக உள்ள பிகேபி அவர்கள் பதிவு, அதிரடியாக தகவல்களை அள்ளி தெளித்து எழுதும் தமிழ்நெஞ்சம், இடுகைகளில் படங்கள் அதிகமாக போட்டு விளக்கமாக எழுதும் சுபாஷ் போன்றோரை பார்த்து பதிவு எழுத ஆவல் எழுந்தது உண்மை. பிகேபி அவர்கள் பதிவு அதிக வரவேற்பை பெற்று இருந்தாலும் தமிழில் தொழில் நுட்ப பிளாக்குகள் குறைவாகவே உள்ளன. நாம் முயற்சிக்கலாம் என்று ஆரம்பித்த இந்த பதிவு எனக்கு திருப்திகரமாகவே உள்ளது.
எனக்கு டிராபிக் அளித்த தளங்கள் பற்றி பார்ப்போம்.
தமிழிஷ்.காம் : தமிழிஷில் எப்போதும் தொழிநுட்ப இடுகைகளுக்கு வரவேற்பு

தமிழ்மணம்.நெட் : பிரபல திரட்டியான தமிழ்மணம் பதிவர்களின் தாய்வீடு எனலாம். பதிவுலகில் ஆரம்பத்தில் இருந்து பதிவெழுதும் பதிவர்கள் அனைவரும் இங்குதான் இருப்பார்கள். அதிக ஹிட்ஸ் கிடைக்கும். புதிய பதிவர்களுக்கான
இதனையும் பெரும்பாலானோர் அறிந்திருப்பீர்கள். அறியாதவர்கள் இந்தலிங்க்கை உபயோகித்து உங்கள் பதிவுகளை இணைக்க தமிழ்மணத்திடம் அனுமதி பெற்று பின்பு பதிவுகளை தொடர்ச்சியாக இணைக்கலாம். அனுமதி பெறுவதற்கு நீங்கள் உங்கள் பிளாக்கில் குறைந்த பட்சம் 3 இடுகைகளாவது தமிழில் எழுதி இருக்க வேண்டும்.
தட்ஸ்தமிழ்.காம் : நான் இந்த இடுகை எழுத காரணமாக இருந்ததே இந்த தளம்தான். தட்ஸ்தமிழ் என்பது பிரபல செய்தித்தளம் என்பதை அனைவரும்
இதில் இடுகைகளை பகிர்வது தமிழிஷ் போன்றதுதான். எளிதான முறைதான். இந்த லிங்க்கை உபயோகித்து உறுப்பினர் கணக்கை உருவாக்கி கொண்டு இந்த லிங்க் மூலம் இடுகைகளை பகிருங்கள். நல்ல டிராபிக் எதிர்பார்க்கலாம்.
ஆனால் இதில் பின்னடைவானது என்னவெனில் அனானியாக யார் வேண்டுமானாலும் ஓட்டு போட்டு கொள்ளலாம். டைனமிக் ஐப்பி வசதி உள்ளவர்கள் தங்கள் இடுகைகளுக்கு தாங்களே அதிக ஒட்டு போட்டு கொள்ள முடிகிறது. இந்த தளம் ஆரம்ப நிலை என்பதால் போக போக மேம்படுத்துவார்கள் என்று நம்புவோம்.
யூத்புல் விகடன்.காம் : பிரபல விகடன் குழுமத்தின் இளைஞர்களுக்கான இணையதளமான இதில் அவர்களே இடுகைகளை தேர்வு செய்து பதிவர்களை
திரட்டி.காம் : இங்கு என் இடுகைகள் தானாக இணைக்கப்பட்டன. பதிவுகள் போடும் நாட்களில் பத்து ஹிட்டுகள் உத்திரவாதம்.
தவிர மற்ற தளங்களை நான் உபயோகித்து பார்த்ததில்லை. பார்த்து விட்டு கவரும் பட்சத்தில் பின்பு எழுதுகிறேன்.
தமிழிஷ், தமிழ்மணம் போன்றவற்றில் பகிர்ந்து வருவோர் புதிய வரவுகளான தட்ஸ்தமிழ் புக்மார்க், யூத்புல் விகடன் போன்றவற்றிலும் பகிருங்கள். இவர்களை போன்ற பிரபல தளங்கள் பதிவுலகுக்கு வரும் போது ஆதரவு தருவது நம் கடமை. அவர்கள் மேலும் பல வசதிகள் தர உற்சாகமாய் இருக்கும். அப்போது தான் தினமலர், நக்கீரன் போன்ற மற்ற பிரபல தளங்களும் பதிவுலகில் கால் வைக்கும். பதிவுலகம் வளரும்.
எனக்கு தெரிந்தவற்றை வைத்து இந்த இடுகையை எழுதி உள்ளேன். தவறுகள் இருந்தால் சுட்டி காட்டவும். ஒரு சிலருக்காவது உபயோகமாக இருந்தால் மகிழ்வேன்.
24 comments:
இது போல ஆங்கில வலைப்பூக்களுக்கு என பிரத்தியேகமாக உள்ள திரட்டிகளை அறியத் தாருங்கள். நன்றி
இந்தப் பதிவைப் படித்த பிறகு oneindia ல உறுப்பினராகி 5 பதிவுகளை இணைத்துள்ளேன். நாளை தெரியும் ட்ராஃபிக் ரிசல்ட்
பூச்சரம்
இலங்கை பதிவாளர்களின் வலைப்பூ சரம் DIRECTORY OF SRI LANKAN BLOGGERS
"கேளுங்க.. கேளுங்க.. நல்லா கேளுங்க.."
விரைவில்..பிரபல பதிவர்களை உங்கள் கேள்விகளால் துளைத்தெடுக்க களம் அமைக்கிறது.. பூச்சரம்
பதிவுலக நண்பர்களோடு கருத்துக்களை பகிருங்கள்
பூச்சரம் online பதிவர் சந்திப்பு.. வெகு விரைவில்..
//நான் தேர்ந்தெடுத்த இணையதளங்கள் தமிழ்மணம், தமிழிஷ் , தட்ஸ்தமிழ் புக்மார்க்//
இதில் தட்ஸ்தமிழ் ல் தற்போது வடிவமைப்பை மாற்றி விட்டார்கள்
//இங்கு பகிர்ந்த பிறகுதான் எனக்கு அதிகம் பின்னூடங்கள் வந்தன. நல்ல அறிமுகங்கள் கிடைக்கும்.//
வழிமொழிகிறேன்
அருமை அழகாக பயனுள்ள செய்திகளை எழுதுகிறீர்கள்..வாழ்த்துக்கள்..!
தட்ஸ்தமிழில் பழைய வடிவமைப்பில்தான் அதிக ஹிட்ஸ் கிடைத்தது. இப்போது புதிய வடிவமைப்பில் ஹிட்ஸ் குறைவதை உணரலாம். தளத்தை தற்போது மேம்படுதிக்கொண்டிருகிறார்கள்.
விரைவில் நல்ல சேவை தருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
தட்ஸ் தமிழ் சைட் பாதுகாப்பானதல்ல என் மெகபி அட்வைசர் சொல்லுதே..,
Yes, old system at oneindia was better. Giving each person equal exposure .Now not a single hit
//இது போல ஆங்கில வலைப்பூக்களுக்கு என பிரத்தியேகமாக உள்ள திரட்டிகளை அறியத் தாருங்கள். நன்றி
//
@தமிழ்நெஞ்சம்
http://digg.com, http://mixx.com இவை உலக அளவில் பிரபலமானவை.
http://indianpad.com, http://humsurfer.com இவை இந்திய அளவில் பிரபலமானவை.
//இதில் தட்ஸ்தமிழ் ல் தற்போது வடிவமைப்பை மாற்றி விட்டார்கள் //
@கிரி
நீங்கள் சொல்லுவது சரிதான். தற்போது மாற்றப்பட்டுவிட்டது.
//வழிமொழிகிறேன்//
நன்றி.
//அருமை அழகாக பயனுள்ள செய்திகளை எழுதுகிறீர்கள்..வாழ்த்துக்கள்..!//
@முக்கோணம்
நன்றி.
//தட்ஸ் தமிழ் சைட் பாதுகாப்பானதல்ல என் மெகபி அட்வைசர் சொல்லுதே..,//
@அறிவேதெய்வம்
http://www.siteadvisor.com/sites/oneindia.in
"We tested this site and didn't find any significant problems."
mcafee கிரீன் சிக்னல் போட்டு இருக்காங்க. பிரச்சினைகள் இல்லை என்று சொல்லுகிறது.
//shirdi.saidasan@gmail.com said...
Yes, old system at oneindia was better. Giving each person equal exposure .Now not a single hit//
உங்கள் இடுகை அங்கு பிரபலம் ஆனால் நல்ல ஹிட் கிடைக்கும்
//இந்தப் பதிவைப் படித்த பிறகு oneindia ல உறுப்பினராகி 5 பதிவுகளை இணைத்துள்ளேன். நாளை தெரியும் ட்ராஃபிக் ரிசல்ட்//
@தமிழ்நெஞ்சம்
ரிசல்ட் பற்றி கண்டிப்பாக தெரிவியுங்கள். அறிய ஆவலாக உள்ளேன்
//இங்கு பகிர்ந்த பிறகுதான் எனக்கு அதிகம் பின்னூடங்கள் வந்தன. நல்ல அறிமுகங்கள் கிடைக்கும்.//
வழிமொழிகிறேன்
Read more: "TVS50: உங்கள் பிளாக்குகளுக்கு டிராபிக்கை பெருக்க பல வழிகள்" - http://tvs50.blogspot.com/2009/05/tamil-blog-traffic-source.html#ixzz0FGYC8NF0&A
நண்பா நல்ல பதிவு, எனக்கும் தட்ஸ் தமிழ் ரொம்ப நாளா தெரியாது ஆனா அதுவும் நல்ல டிராபிக் தருகிறது...
மிக பயனுள்ள பதிவு PKP தள்ம் Kricons சொல்லி தான் எனக்கே தெரியும்
என்னை போன்ற ஆரம்ப நிலை பதிவர்களுக்கு மிக நல்ல உபயோகமான பதிவு
ஷங்கர் சொன்னது உண்மை
//தட்ஸ்தமிழில் பழைய வடிவமைப்பில்தான் அதிக ஹிட்ஸ் கிடைத்தது. இப்போது புதிய வடிவமைப்பில் ஹிட்ஸ் குறைவதை உணரலாம். தளத்தை தற்போது மேம்படுதிக்கொண்டிருகிறார்கள்.//
சுரேஷ், ஷங்கர் உங்கள் ஆதரவிற்கும், கருத்துகளுக்கும் நன்றி
Here is the result...
Yesterday I added my posts in oneindia.in.
24 hours over. within 24 hours i got good visitors from oneindia.
here is the result.
Amazing Photos 134
A Blog For Edutainment 150
TamilNenjam.org
40
What is my opinion is people are eager to watch videos, pictures than text contents.
//இந்தப் பதிவைப் படித்த பிறகு oneindia ல உறுப்பினராகி 5 பதிவுகளை இணைத்துள்ளேன். நாளை தெரியும் ட்ராஃபிக் ரிசல்ட்//
@தமிழ்நெஞ்சம்
ரிசல்ட் பற்றி கண்டிப்பாக தெரிவியுங்கள். அறிய ஆவலாக உள்ளேன்
Read more: "TVS50: உங்கள் பிளாக்குகளுக்கு டிராபிக்கை பெருக்க பல வழிகள்" - http://tvs50.blogspot.com/2009/05/tamil-blog-traffic-source.html#ixzz0FI4UIaXs&A
இவற்றில் digg.com, indianpad இவற்றில் சேர்த்து வருகிறேன். stumbleupon,reddit.com இங்கேயும் - சர்வதேச தளங்களில் நல்ல ரெஸ்பான்சு வருகிறது.
http://humsurfer.com, http://mixx.com - இவை இரண்டையும் முயற்சிக்கிறேன். இன்று
@தமிழ்நெஞ்சம்
http://digg.com, http://mixx.com இவை உலக அளவில் பிரபலமானவை.
http://indianpad.com, http://humsurfer.com இவை இந்திய அளவில் பிரபலமானவை.
Read more: "TVS50: உங்கள் பிளாக்குகளுக்கு டிராபிக்கை பெருக்க பல வழிகள்" - http://tvs50.blogspot.com/2009/05/tamil-blog-traffic-source.html#ixzz0FI4S5iFg&A
//கவிதை காதலன் said...
May 11, 2009 10:13 PM
என்னை போன்ற ஆரம்ப நிலை பதிவர்களுக்கு மிக நல்ல உபயோகமான பதிவு
//
ஆரம்பநிலை பதிவர்களுக்குத்தான் எழுதினேன். உபயோகமாக இருந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி
@தமிழ்நெஞ்சம்
உங்களுக்கும் உபயோகப்படும்விதம் பதிவு போட்டதில் மகிழ்ச்சியாக உள்ளது.
//What is my opinion is people are eager to watch videos, pictures than text contents.//
நான் வீடியோ பதிவு போட்டால் கூட்டம் கம்மி ஆகி விடுகிறது. :(
நான் மக்கள் அலுவலகத்தில் இருந்து அதிகம் பார்ப்பதால் / Bandwidth Limitted Broadband வைத்திருப்பதால் வீடியோ பாக்க விரும்புவதில்லை என்று நினைத்தேன்.
நல்ல தகவல் தல
Social networks மூலமாக சுட்டியை பகிர்ந்துகொள்வதன் மூலமும் அதிக ஹிட்ஸ் கிடைக்கும்.
facebook மூலமாக கிடைக்கும் மாதாந்த ஹிட்ஸ் குறைந்தது 5000. ஆனால் ஆங்கிலத்தளங்களென்றால்தான் இது வேலைக்காவுது. மற்றும் இதுக்கென தனி FB கணக்கு பணன்படுத்டதவும்.
Twitter. my space போன்றவற்ழறயும் பயன்படுத்லாம்.
மிக அருமையான பதிவு... என் போன்ற புதியவர்களுக்கு மிக உபயோகமான இடுக்கை
உங்கள் தகவல்கள் அனைத்துமே , கணினி துறை சாராத எனக்கு ஒரு வரப் பிரசாதமே!
nanri!!tvs50
உங்களின் இந்த பதிவின் மூலம், ஒரே நாளில் எனது ஒரு பதிவிற்கு 200 பார்வையாளர்களும், 9 ஓட்டுக்களும் கிடைத்தது.
மிக்க நன்றி.
தங்களது வழிகாட்டி எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது.தமிழ்நாட்டின் உள்ள ஓவ்வொருவரும் தனி வலைப்பதிவு விரைவில் ஆரம்பிக்க வேண்டும்.அதற்கு உங்களது தொழில்நுட்பம் வலைப்பூ ஒரு கலங்கரை விளக்கமாக இருக்கும்.www.aanmigakkadal.blogspot.com
Post a Comment