கணினியில் நோட்பேடை (Notepad) திறந்து கொள்ளுங்கள். கீழே உள்ள வரிகளை காப்பி செய்து கொண்டு நோட்பேடில் பேஸ்ட் செய்து கொள்ளவும். இணையதளம் உங்கள் விருப்ப இணைய உலாவியில் திறக்குமாறு அமைத்து கொள்ள முடியும்.
இணையதளம் Internet Explorer -ல் திறக்க வேண்டும் என்று விரும்பினால்
Windows Registry Editor Version 5.00
[HKEY_CLASSES_ROOT\Directory\Background\shell\Tvs50 - TamilNutpam]
[HKEY_CLASSES_ROOT\Directory\Background\shell\Tvs50 - TamilNutpam\command]
@="iexplore tvs50.blogspot.com"
இணையதளம் Firefox -ல் திறக்க வேண்டும் என்று விரும்பினால்
Windows Registry Editor Version 5.00Tvs50 - TamilNutpam என்பதில் இணையதள பெயரை கொடுத்து கொள்ளுங்கள். tvs50.blogspot.com என்பதில் இணையதள முகவரியை கொடுத்து கொள்ளுங்கள்.
[HKEY_CLASSES_ROOT\Directory\Background\shell\Tvs50 - TamilNutpam]
[HKEY_CLASSES_ROOT\Directory\Background\shell\Tvs50 - TamilNutpam\command]
@="firefox tvs50.blogspot.com"
முக்கியமாக File --> Save As கொடுத்து கோப்பை சேமிக்கவும். கோப்பின் பெயர் addshortcut.reg என்றும், 'Save as type :' என்பதில் 'All Files' தேர்வு செய்து கொள்ளவும். Save செய்து கொள்ளவும்.
இப்போது addshortcut.reg கோப்பை டபுள் கிளிக் செய்து திறக்கவும். Registry -யில் நீங்கள் அளித்திட்ட தகவல்கள் சேர்க்கப்பட்டது என்று வரும். அவ்வளவுதான்.
இப்போது கணினியின் டெஸ்க்டாப்பில் மௌசால் வலது கிளிக் செய்யவும். நீங்கள் கொடுத்த இணையதள முகவரி இருக்கும்.
அதை கிளிக் செய்யும்போது நீங்கள் கொடுத்திட்ட இணையதளம் திறக்கும்.
குறிப்பு : இது விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7 -ல் மட்டுமே வேலை செய்யும். விண்டோஸ் எக்ஸ்பியில் வேலை செய்யாது .
13 comments:
paypal அக்கவுண்டுக்கு பதிவு போடுறதா சொன்னிங்களே!
மன்னிக்கணும் வால்பையன் அண்ணே.... நீங்க என் கிட்ட கேட்கவே இல்லை. கேட்டிருந்தால் கண்டிப்பா பதில் சொல்லி இருப்பேன்.
Paypal -ல் என்ன சந்தேகம்? இல்லையெனில் Paypal கணக்கு எப்படி உருவாக்குவது என்று தெரியனுமா?
சொன்னீங்கன்னா புது இடுகை போட்டுடலாம்.
//Paypal கணக்கு எப்படி உருவாக்குவது என்று தெரியனுமா?//
அதே தான் தல!
எனக்கு ஒரு சந்தேகம் என்னுடைய எப்பொழுது சுட்டி கொடுத்தாலும் புதிய விண்டோவில் திறக்கும் படி செய்யவேண்டும் முடியுமா? எப்படி செய்ய வேண்டும்?
உங்கள் பதிவுகள் அனைத்து அருமை தொடரட்டும் எந்தன் தாய்மொழி வழியாக பதிவுகள் அனைத்தும் இணையத்தில் உலா வரட்டும்.
note pad eppadi poi thirakkanum?
ungkal pathivu ellaame arumai.
அருமை பாஸ்.. Registry updated -னு சொல்லிடுச்சு.. ஆனா 'Desktop Right Click' பண்ணினா அந்த இணையதள ஆப்ஷன் வரலே.. restart பண்ணனுமா ?
@செந்தில்குமார்
உங்கள் Operating System என்ன? இது விண்டோஸ் எக்ஸ்பியில் ஒர்க் ஆகாது. விண்டோஸ் விஸ்டா என்றால் restart செய்து பாருங்கள்
அனானி நண்பரே!
Notepad திறக்க Start பட்டனை கிளிக் செய்து All Programs --> Accessories --> Notepad கிளிக் செய்து கொள்ளுங்கள்.
அல்லது
Start பட்டனை கிளிக் செய்து Run கிளிக் செய்யுங்கள். அதில் notepad என்று கொடுத்து OK கிளிக் செய்யவும்.
@வடிவேலன். ஆர.
உங்கள் சந்தேகத்திற்கு புதிய இடுகை போட்டு உள்ளேன் பார்க்கவும்.
இடுகையில் லிங்க்குகள் கொடுக்க/புதிய பக்கத்தில் திறக்க
@வால்பையன்
paypal பற்றி விரிவான பதிவு எழுதி வருகிறேன். விரைவில் தருகிறேன்.
இவர் சும்மா படம் காட்டுறாருங்க. ஒரு பதிவுக்கு பின்னூட்டம் போடக் கூடத் தெரியாத எத்தனையோ மென்பொருளாளர்களை நான் கண்டிருக்கிறேன். ஆனால் இவருக்கு பதிவுக்கு பின்னூட்டம் போடத்தெரிகிறது. ஆனால் நோட்பேடை எப்படி திறக்கிறதுன்னு தெரியலையாம். சும்மா உதார் பேர் வழி. படம் காட்டுறார்..
///note pad eppadi poi thirakkanum?
ungkal pathivu ellaame arumai.
@Sharepoint the Great
உதார் விடுர்ராரன்னு தெரியல.... இப்போது புதிதாக கணினி வாங்கியவரா இருக்கலாம் :)
மிக்க நன்றிகள்
இப்பவே செய்து பார்க்கிறேன்.
Post a Comment