வீடியோக்களை வெட்ட இலவச வீடியோ கட்டர்

முழுநீள வீடியோக்களின் குறிப்பிட்ட பகுதி நமக்கு தனியாக சில சமயம் தேவைப்படும். எடுத்துகாட்டாக ஒரு திரைப்பட வீடியோவில் இருந்து ஒரு பாடலோ அல்லது காமெடி காட்சியோ தேவைப்படலாம். அதனை வெட்டி எடுக்க மிகப்பெரிய மென்பொருள் எதனையும் தேடி அலைய தேவை இல்லை. 3MB அளவிலான ஒரு இலவச மென்பொருளே அந்த வேலையை சரியாக செய்கிறது.

Free Video Cutter. இந்த மென்பொருளை இந்த லிங்கில் சென்று தரவிறக்கி கணினியில் நிறுவி கொள்ளுங்கள். இந்த மென்பொருளில் எந்த வீடியோவையும் ஓபன் செய்து கொண்டு சிலைடர்கள் மூலம் தேவைப்படும் பகுதியின் ஆரம்ப நிலையையும், இறுதி நிலையையும் தேர்வு செய்து கொண்டு, Save Video மூலம் உங்களுக்கு தேவையான வீடியோ பகுதியை பெற்று கொள்ளுங்கள்.


இதன் மூலம் உங்கள் வீடியோவை MPEG4, DivX, MP3, FLV, WMV Format -களில் பெற முடியும். குறிப்பிட்ட வீடியோவில் உள்ள ஆடியோ பகுதியை மட்டும் பிரித்தெடுத்து MP3 யாக சேமித்து கொள்ள முடியும்.

மிகவும் சிறிய அளவிலான எளிய மென்பொருள். உங்கள் மென்பொருள் தொகுப்பில் வைத்து கொள்ளுங்கள். USB/DVD மூலம் வேண்டுமென்ற இடத்திற்கு எளிதில் எடுத்து சென்று எளிதாக உபயோகித்து கொள்ள முடியும்.
Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

9 comments:

Tech Shankar said...

நன்றி தல

Tech Shankar said...

இன்னும் மாடரேசன் வைக்கலையா?

kugan said...

you are doing very good service to tamilworld.
thank you for bring the modern tech to tamils

http://equalityco.blogspot.com

வடுவூர் குமார் said...

சின்ன வீடியோவுக்கு பரவாயில்லை இல்லையென்றால் கொஞ்ச நேரமாகுது.இலவசம் தானே! காத்திருக்கலாம்.

வடுவூர் குமார் said...

பெரிய வீடியோக்களுக்கு இது ஒரு மோசமான மென்பொருள்.இதற்கு பதிலாக avidemux உபயோகிக்கலாம்.

டிவிஎஸ்50 said...

நன்றி! தமிழ்நெஞ்சம், குமார், குகன்

குமார் நீங்கள் கூறியது சரிதான் பெரிய வீடியோக்களுக்கு வேகம் குறைவாத்தான் இருக்கு.

Options சென்று "Dont Create Thums" ஆப்சனை எடுத்து விடுங்கள். வேகமாக இருக்கும். அனால் ப்ரிவயு தெரிய மாட்டேங்குது :( ..

rajasurian said...

any free video merger available?

priyamudanprabu said...

நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மிகப் பயனான பதிவு.
மிக்க நன்றி