கூகுளின் ஜிமெயிலில் வீடியோ சாட்டை சில மாதங்களுக்கு முன்பு கூகிள் அறிமுகபடுத்தியது. அதனை நிறுவுவதில் பிரச்சினைகள் இருப்பதாக பதிவர் குப்பன்_யாஹூ அவர்கள் பின்னூட்டங்களில் கேட்டதால் அனைவருக்கும் புரியும்படி எளிதான விளக்கம் அளிப்பதற்காக இந்த பதிவை எழுதுகிறேன்.
கூகிள் ஜிமெயில் உபயோகிக்கும் போது இடது புறம் சாட் (Chat) பகுதியை நீங்கள் காண முடியும். அதில் Options கிளிக் செய்தால் வரும் தேர்வுகளில் Add Video & Voice கிளிக் செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் இந்த http://mail.google.com/videochat முகவரிக்கு மாற்றபடுவீர்கள். அங்கு "Install Voice and Video Chat" கிளிக் செய்து GoogleVoiceAndVideoSetup.exe என்ற கோப்பை தரவிறக்கி கொள்ளுங்கள்.
முக்கியமாக இப்போது நீங்கள் திறந்து வைத்துள்ள அனைத்து இணைய உலாவிகளையும் (Internet Browsers) மூடி விடுங்கள். வெப் காமெராவை ஆன் செய்து கொள்ளுங்கள். அடுத்து GoogleVoiceAndVideoSetup.exe கோப்பை திறந்து கூகிள் வீடியோ சாட்டை உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.
இணைய உலாவியை திறந்து ஜிமெயில் உள்ளே செல்லுங்கள். அங்கே வலது மூலையில் உள்ள Settings கிளிக் செய்து Chat பகுதியை தேர்வு செய்து கொள்ளுங்கள். கூகிள் வீடியோ சாட் உங்கள் கணினியில் வெற்றிகரமாக நிறுவப்பட்டிருந்தால் Voice and video chat: என்ற பகுதியில் உங்கள் வெப் காமெரா மற்றும் மைக் பற்றிய விவரங்கள் தெரியும்.
இனி மறு முனையில் வெப் கமெராவுடன் தயார் நிலையில் உள்ள உங்கள் நண்பருடன் சாட் செய்ய வேண்டியதுதான். நண்பரின் முகவரியில் கிளிக் செய்து சாட் விண்டோவை திறந்து கொள்ளுங்கள். Video & more ஐ கிளிக் செய்து Start video chat செய்து கொள்ளுங்கள்.
எதிர் முனையில் உள்ள உங்கள் நண்பர் Answer கிளிக் செய்து உங்களை அனுமதித்தவுடன் இருவரும் வீடியோ சாட்டிங் செய்ய ஆரம்பிக்கலாம்.
அவ்வளவுதான். இதனை நிறுவும் போது சிலருக்கு சிரமங்கள் நேர்கிறது. அதனை பற்றி பார்ப்போம்.
Settings ---> Chat பகுதிக்கு செல்லும் போது Voice and video chat: என்ற பகுதியில் வெப் காமெரா மற்றும் மைக் பற்றிய விவரங்கள் தெரியாது. "Detecting Devices" என்றே நீண்ட நேரம் இருக்கும். இந்த பிழை பரவலாக பலருக்கும் நேர்ந்துள்ளது. இது போன்ற சூழ்நிலையில் அனைத்து இணைய உலாவிகளையும் மூடி விடுங்கள்.
1. அடுத்து Start --> Control Panel --> Add Remove Programs சென்று "Google Talk Plugin" என்பதை தேந்தெடுத்து Remove செய்து கொள்ளவும்.
2. Start --> Run கிளிக் செய்து அதில் regedit என்று டைப் செய்து OK கொடுங்கள். Registry Editor திறக்கும்.
அங்கே HKEY_CURRENT_USER --> Software --> Google சென்று Google Talk Plugin என்பதில் வலது கிளிக் செய்து Delete செய்யவும். Registry Editor ஐ மூடி விடவும்.
3. Start --> Run கிளிக் செய்து அதில் %USERPROFILE%\Local Settings\Application Data\Google\ என்று கொடுத்து OK கிளிக் செய்யுங்கள்.
திறக்கும் விண்டோவில் "Google Talk Plugin" என்ற Folder இருந்தால் அதனை Delete செய்யவும். "Google Talk Plugin" என்ற Folder இல்லை என்றால் ஒன்றும் பிரச்சினை இல்லை.
4. இப்போது மீண்டும் நீங்கள் ஏற்கனவே தரவிறக்கி வைத்துள்ள GoogleVoiceAndVideoSetup.exe என்ற கோப்பை திறந்து கூகிள் வீடியோ சாட் நிறுவவும்.
நிறுவியவுடன் கணினியை Reboot செய்யவும்.
இப்போது இணைய உலாவியை திறந்து ஜிமெயில் சென்று Settings --> Chat பகுதியில் பார்க்கவும். உங்கள் கணினியில் உள்ள வெப் கேமரா, மைக் போன்ற விவரங்கள் தெரியும்.
இனி நீங்கள் வழக்கம் போல் வீடியோ சாட் செய்யலாம்.
ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் பின்னூட்டத்தில் தயங்காமல் கேட்கவும். முடிந்த அளவு தீர்வளிக்க முயல்கிறேன்.
2 comments:
இந்த பிரச்னை நான் IE ல் முயற்சி செய்த பொழுது
வந்தது
firefox ல் முயற்சி செய்த பொழுது பிரச்னை எதுவுமில்லை
Adobe flash player இல்லனா நிறுவச்சொல்லும்
அதுவும் நிறுவியபிறகு எந்த பிரச்னையும் கிடையாது
many many thanks, will follow your steps and come back if its not ok.
Post a Comment