RSS செய்தியோடையின் முக்கியத்துவம், மகத்துவம்

இணையத்தில் கோடிக்கணக்கான இணையதளங்கள் குவிந்துள்ளன. நம்மை கவர்ந்த தளங்கள் நூற்றுகணக்கில் இருக்கும். அவற்றில் சில தளங்களை மட்டும் தான் நாம் தினசரி சென்று பார்வையிடுவோம். நம்மை கவர்ந்த அனைத்து தளங்களையும் தினசரி சென்று பார்வையிடுவது நேரமின்மையால் இயலாத காரியம். ஒவ்வொரு தளமாக நாம் சென்று பார்ப்பதும் நமது நேரத்தை விரயம் செய்யும். சில தளங்களுக்கு செல்லும் போது புதிய தகவல் / செய்தி இல்லை எனில் அது எரிச்சலை தரும்.

இது போன்ற சூழ்நிலையில் நாம் விரும்பும் அனைத்து தளங்களும் அவற்றின் புதிய செய்திகள் / தகவல்களை நம்மை தேடி அனுப்பி வைத்தால் எவ்வளவு எளிதாக இருக்கும்? அனைத்து புதிய செய்திகள் / தகவல்களையும் பெற பல தளங்களுக்கு அலையாமல் ஒரே இடத்தில் பெற முடிந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும்?

இப்படியொரு வசதிக்கு பெயர்தான் RSS (Really Simple Syndication) . தமிழில் செய்தி ஓடை என்று அழைக்கிறார்கள். புரிந்து கொள்ளுவதில் சிரமம் இருந்தால் இந்த வீடியோவை பாருங்கள். மிக அருமையாக விளக்கி இருக்கிறார்கள்.



பெரும்பாலான இணையதளங்கள் / பிளாக்குகள் இந்த வசதியை அளிக்கின்றன. இணைய தளங்களில் ஆரஞ்சு வண்ணத்தில் (பெரும்பாலும்) ஒரு ஐகானை நீங்கள் காணலாம். அதுதான் அந்த தளத்தின் RSS Feed க்கான லிங்க். இந்த RSS Feed மூலம் தகவல்களை அணுகுவதற்கு RSS Feed Reader தேவை. இதற்கு தேவையான Rss Feed Reader மென்பொருள்கள் FeedReader, FeedDemon போன்றவை இலவசமாக கிடைக்கின்றன. இது தவிர இணைய உலாவிகள் மூலமும் நீங்கள் Rss Feed -களை வாசித்து கொள்ள முடியும். ஆன்லைனில் Google Reader, FriendFeed, Bloglines போன்ற தளங்கள் Rss Feed களை வாசிக்க உதவுகின்றன.

இங்கு நாம் ஒரு சிறிய உதாரணத்தை பார்ப்போம். இலவச மென்பொருளான FeedDemon இந்த லின்க்கில் சென்று தரவிறக்கி கணினியில் நிறுவி கொள்ளுவோம்.

FeedDemon -ல் Rss Feed ஐ இணைக்க "Subscribe" கிளிக் செய்யுங்கள். இணைக்க விரும்பும் இணையதளத்தின் RSS Feed URL அல்லது அந்த இணையதளத்தின் URL கொடுத்து இணைத்து கொள்ளவும்.


ஒரு இணையதளத்தின் RSS Feed URL கண்டறிவது எப்படி?

பெரும்பாலும் ஆரஞ்சு வண்ணத்தில் சிறிய ஐகானாக கொடுத்து இருப்பார்கள். அல்லது RSS Feeds என்று தனியாக விளக்கமாக கொடுத்து இருப்பார்கள். அதை கிளிக் செய்தால் வருகிற URL தான் RSS Feed URL.

பெரும்பாலும் FeedDemon இணையதளத்தின் URL (உதா. http://tvs50.blogspot.com) கொடுத்தாலே அதன் RSS Feed URL ஐ தானாக கண்டறிந்து கொள்ளும்.

சில தளங்களின் RSS Feed URL களை காண்போம்.

பிரபல தளங்கள் :
தினமலர் - http://www.dinamalar.com/rssfeed.asp
தட்ஸ்தமிழ் - http://feedproxy.google.com/oneindia-thatstamil-all
விகடன் - http://feedproxy.google.com/vikatan/newss
தமிழிஷ் பிரபல இடுகைகள் - http://www.tamilish.com/rss ,
தமிழ்மணம் - http://www.tamilmanam.net/feed

சில பிளாக்குகள் :
பிகேபி - http://pkp.blogspot.com/feeds/posts/default
தமிழ்நெஞ்சம் - http://tamilnenjam.org/feeds/posts/default
தேன்தமிழ் - http://honey-tamil.blogspot.com/feeds/posts/default
தமிழ்ஹேக்ஸ் - http://tamilhackx.blogspot.com/feeds/posts/default
சூர்யா கண்ணன் - http://suryakannan.blogspot.com/feeds/posts/default


இந்த URL களை நீங்கள் இணைத்து கொள்ளலாம். எனது இந்த பிளாகின் RSS செய்தியோடையையும் http://feeds2.feedburner.com/tvs50 இணைத்து கொள்ளுங்கள் :)

இந்த செய்தி ஓடைகளில் (RSS Feed) சில முழு செய்திகளையும், சில செய்தி சுருக்கத்தையும் தரும். பெரும்பாலான பிளாக்குகள் முழு செய்தி/ தகவல்களை தருகின்றன. நீங்கள் அந்த பிளாக்குகளுக்கு செல்லாமலேயே அவற்றில் வரும் புதிய செய்திகளை நீங்கள் வாசித்து கொள்ள முடியும். செய்தி சுருக்கம் தரும் செய்தி ஓடைகள் (தினமலர், தட்ஸ்தமிழ் போன்றவை ) புதிய செய்திகளை பட்டியலிடும். நீங்க விரும்பும் செய்தியை தேர்வு செய்து அந்த தளத்திற்கு சென்று படித்து கொள்ளலாம்.


புதிய செய்திகள் / இடுகைகள் வரும் போது குறிப்பிட்ட கால அளவில் நமக்கு தெரியப்படுத்தி கொண்டு இருக்கும். RSS செய்தி ஓடையின் பயனை சுருங்க சொல்ல வேண்டும் எனில் இணையத்தளங்களின் செய்திகள் அனைத்தும் உங்களை தேடி வரும். வேண்டியவற்றை தேர்ந்தெடுத்து ஒரே இடத்தில் நீங்கள் படித்து கொள்ள முடியும்.

இதன் மூலம் உங்கள் நேரம் மிச்சம். வேகம் குறைவான இணையதளங்கள் / பிளாக்குகளில் அதிக நேரம் பொறுமை இழந்து காத்திருக்க தேவை இல்லை. இணையத்தளங்களின் அதிகப்படியான விளம்பரங்களில் இருந்து தப்பிக்கலாம். உங்கள் இணைய இணைப்பின் பேண்ட்வித் மிச்சமாகும். பிளாக்குகளை படிக்க திரட்டிகளில் தேடி அலைய வேண்டியதில்லை. நமக்கு விருப்பமான பிளாக்குகளை தொகுத்து எளிதாக வாசித்து கொள்ளலாம்.

நான் இங்கு FeedDemon பற்றி விளக்கி இருந்தாலும், நான் உபயோகிப்பது ஆன்லைன் RSS Feed Reader , கூகிள் நிறுவனத்தின் கூகிள் ரீடரைத்தான். அதைப்பற்றி விரிவாக அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

12 comments:

Tech Shankar said...

அடேங்கப்பா. கலக்கிட்டீங்க தல. சூ ப் ப ர்.

Suresh said...

மிக சிறந்த பயனுள்ள பதிவு நண்பா

Suresh said...

அப்படியே Twitter பற்றியும் அதில் ஆர்ஸ்ஸ் ஆட்டோமேடிக்காக இணைப்பது குறித்தும் கூறுங்கள்

Karthik said...

*+* இது ஏற்கனவே தெரிந்த விடயம் தான் ஆனாலும் மீண்டும் வாசிக்க நன்றாக இருந்த்தது.நீங்கள் எல்லோருக்கும் புரியும்படி விள‌க்கமாக எழுதியிருக்கிறீர்கள்.*+*

டிவிஎஸ்50 said...

நன்றி! தமிழ்நெஞ்சம், சுரேஷ், கார்த்திக்

//அப்படியே Twitter பற்றியும் அதில் ஆர்ஸ்ஸ் ஆட்டோமேடிக்காக இணைப்பது குறித்தும் கூறுங்கள்//

டிவிட்டேர் உபயோகித்து பாத்தா அனுபவம் இல்லை. கற்று கொண்டபின் எழுதலாம். :)

கார்த்திக்!
அதிக பேருக்கு இதை பற்றி தெரிந்திருக்கு வாய்ப்பு உண்டு. இணையத்தில் நுழையும் புதுமுகங்களுக்காக எழுதினேன்

டிவிஎஸ்50 said...

கருத்துக்கு மிக்க நன்றி பயபுள்ள!

Siva said...

Thanks for explaining RSS in a simple manner

vivegaprasanna said...

thanku sir ....

Unknown said...

All your information, explanations & links are very good & useful.
Give us the link to download a file in part by part or break the download or pause the download when the speed of net is very slow.
Thank you

கண்ணகி said...

pudithaka ullaye varum ennakku useful ahaka irrukkrathu.

Unknown said...

Greatttttt

KANNAA NALAMAA said...

nanragavum vilakkamagavum ulladhu.