ஈமெயில் பாதுகாப்பு : தற்காலிக ஈமெயில் முகவரி பெற

ஈமெயில் முகவரியை பிறரிடம் அளிப்பதில் சில சங்கடங்கள் உண்டு.

உங்களுக்கு அதிகம் அறிமுகம் / பழக்கம் இல்லாத நபர் ஒருவர் உங்களுக்கு தகவல் அனுப்ப வேண்டும் என்பதற்காக உங்கள் ஈமெயில் முகவரியை கேட்கிறார். அவருக்கு உங்கள் ஈமெயில் முகவரியை அளிக்க உங்களுக்கு தயக்கம். ஒரு முறை கொடுத்தால் அந்த நபர் தொடர்ந்து இம்சை தரக்கூடிய மெயில்களை அனுப்பி தொந்தரவு செய்வாரோ என்று தயங்குகிறீர்கள்.

சிலரிடம் ஈமெயில் முகவரியை கொடுத்து விட்டு அவரிடமிருந்து வந்து குவிந்த ஆபாச மெயில்களால் ஈமெயில் முகவரியை மாற்றியவர்களும் உண்டு.

சில தளங்கள் நீங்கள் ஈமெயில் முகவரி அளித்தால் தான் டவுன்லோட் செய்ய முடியும் / வீடியோ பார்க்க முடியும் என்ற கட்டுபாடுகளை வைத்து இருப்பார்கள்.

பெரும்பாலான தளங்களில் உள்ள சேவைகளை நீங்கள் உபயோகிக்க விரும்பும் போது உங்கள் ஈமெயில் முகவரியுடன் பதிவு செய்வதை கட்டாயமாக்கி இருப்பார்கள். பதிவு செய்யாமல் அவற்றின் சேவைகளை நாம் உபயோகிக்க முடியாது. அவ்வாறு பதிவு செய்யும் போது சில விஷம தளங்கள் நமது ஈமெயில் முகவரியை வியாபார ரீதியில் செயல்பட கூடிய மற்ற தளங்களுக்கு விற்று விடுவார்கள். விளைவு "வயாகரா மாத்திரை வாங்கிக்கோ!", "லாட்டரியில் ஆயிரம் கோடி ருபாய் பரிசு விழுந்து இருக்கு!" என்று நம் ஈமெயில் முகவரிக்கு பல கசடு (Spam) ஈமெயில்கள் வந்து குவியும்.

தனிப்பட்ட உபயோகத்திற்கு ஒரு மெயில் முகவரியும், இது போன்ற பாதுகாப்பற்ற பிற உபயோகங்களுக்கு வேறு ஈமெயில் முகவரிகள் என்று பல ஈமெயில் முகவரிகளும் சிலர் உபயோகிப்பதுண்டு.

இது போன்ற தருணங்களில் நமது உண்மையான ஈமெயில் முகவரியை காப்பாற்றி, ஒரு தற்காலிக ஈமெயில் முகவரியை நம்பகம் இல்லாத இடங்களில் வழங்க ஒரு தளம் வழி செய்கிறது.

Spambox.us . இங்கு நீங்கள் உங்களுக்கு என தற்காலிக ஈமெயில் முகவரியை உருவாக்கி கொள்ளலாம். Spambox.us தளத்திற்கு நீங்கள் சென்று வலது புறம் இருக்கும் "Create Your Spambox" பகுதியில் உங்கள் உண்மையான ஈமெயில் முகவரியை அளிக்கவும். அதன் கீழே நீங்கள் வேண்டுகிற புதிய தற்காலிக ஈமெயில் முகவரியின் ஆயுட்காலம் எவ்வளவு கால அளவில் இருக்க வேண்டும் என்பதரையும் தேர்வு செய்து கொள்ளுங்கள். "Generate Spambox" கொடுத்தால் உங்கள் தற்காலிக ஈமெயில் முகவரி கிடைத்து விடும்.
உதாரணத்திற்கு nBy2t1IBqCWetSId@spambox.us போல் இருக்கும். இதனை நீங்க உபயோகிக்க விரும்பும் தளங்களில் / நபர்களிடம் தற்காலிகமாக உபயோகித்து கொள்ளலாம். இந்த ஈமெயில் முகவரிக்கு அனுப்பப்படும் மின் அஞ்சல்கள் உங்கள் உண்மையான ஈமெயில் முகவரிக்கு தற்காலிகமாக குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே Forward செய்யப்படும். நீங்கள் தேர்ந்தெடுத்த ஆயுட்கால அளவிற்கு பின்பு இந்த ஈமெயில் முகவரி காலாவதி ஆகிவிடும்.


இதன் மூலம் தொடர்ச்சியாக வரும் கசடு (Spam) ஈமெயில்களிடம் இருந்து தப்பிக்கலாம். உங்கள் உண்மையான ஈமெயில் முகவரியையும் தேவையில்லாத இடங்களில் கொடுப்பதை தவிர்க்கலாம். Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

16 comments:

Anonymous said...

மிஸ்டர் மொக்கை நம்பர் ஒன்.... இப்படி வள வளன்னு எழுதி கொல்லுறதை நிப்பாட்டு... சுருக்கமா எழுதி பழகு...

Tech Shankar said...

யோவ் யாருய்யா இது. தைரியமா இருந்தா பேரைச் சொல்லுங்க பார்ப்போம். இப்படி பேரில்லாம திறந்த வீட்டுக்குள்ள வந்து திட்டுரீங்க..

உங்களுக்கெல்லாம் மாடரேசன் வைக்கணும்.
//மிஸ்டர் மொக்கை நம்பர் ஒன்.... இப்படி வள வளன்னு எழுதி கொல்லுறதை நிப்பாட்டு... சுருக்கமா எழுதி பழகு...

Tech Shankar said...

தலைவர் டிவிஎஸ்50 யே கொஞ்ச நாளா ஆளைக்காணோம்னு வருத்தத்தில் இருந்தேன். இன்னைக்கு புது பதிவெழுதியிருக்கார்னு சந்தோசத்தில் வந்தால் - ஒரு மொக்கை கமெண்டை பார்க்க வேண்டி இருக்கு. தைரியம் இருந்தால் பேரைச் சொல்லுங்க பார்ப்போம்.

டிவிஎஸ்50 said...

தட்டி கேட்டதுக்கு மிக்க நன்றி! தமிழ்நெஞ்சம்.

அனானி நண்பரே... கணினியில் ஆழ்ந்த அறிவு இல்லாதவர்களுக்க்காகதான் இந்த பிளாக் எழுதி வருகிறேன்.

உங்களை போன்ற அறிவாளிகளுக்கு சுருக்கமாக "தற்காலிக ஈமெயில் முகவரி உருவாக்க http://spambox.us செல்லுங்கள்" என்று எழுதி இருக்கலாம்.

உங்களை போன்ற அறிவாளிகளுக்கு எழுதும் அளவு என்னிடம் அறிவு இல்லை. நிறைய கற்று கொண்ட பின் உங்களை போன்றோருக்கு எழுதுகிறேன்.

Tech Shankar said...

டிவிட்டரில் போடுங்க - அவர் அதைப் படிப்பார். என்ன சில நாட்களாக ஆளைக்காணோம் நண்பரே!

Tech Shankar said...

தலையில் கையை வைத்து ஒருத்தர் உக்காந்திருக்காரே - செம்ம ஸ்டில் தல. கலக்கிட்டீங்க

சிச்சுவேசன் பிக்சர்.

டிவிஎஸ்50 said...

கொஞ்சம் சலிப்பா இருந்தது :( அதான் தற்காலிக தடங்கல் :)

//என்ன சில நாட்களாக ஆளைக்காணோம் நண்பரே!//

Tech Shankar said...

ஆங்கிலத்தளங்களில்

digg.com ல 500 நண்பர்களை கண்ணாபின்னாவென்று சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு முறையும் அங்கே லாகின் ஆகும்போது 20 இருபது நபர்களாக - கூடுமானவரையில் add friend கொடுத்து விட வேண்டும்.

இப்படி 300+ வந்தவுடன். ஒரு மொக்கைப் பதிவைப் போட்டு - shout என்று சொல்வார்கள் - shout விட்டீங்கன்னா - உடனே 25 ஓட் நிச்சயம்.
digg.com ல நண்பர்கள் இல்லாம ஹிட்ஸ் பார்ப்பது கடினம்.


reddit.com ல ஒரு பதிவுக்கும் அடுத்த பதிவுக்கும் 10 நிமிட இடைவெளி விட்டு விட்டு பதிய வேண்டும்.

ஆனால் டெக்னாலஜி ஆங்கிலப்பதிவு சூடு ஆச்சுன்னா - 3 நாளைக்கு தொடர்ந்து மழை தான். எனது Alternatives for Microsoft visual studio 2005 க்கு 3400 விசிட்டர் 3 நாட்களுக்கு வந்துட்டே இருந்தாங்க.

ஆனால் digg.com ல ஸ்டாண்டர்ட் ஆ ஹிட்ஸ் கிடைக்கும்.

stumbleupon ல ஒருத்தர் என்னுடைய பதிவை அவராவே volunteer ஆ ஆட் செஞ்சார். ஒரே நேரத்தில் 345 விசிட்டர் மேக்சிமம் வந்தாங்க. அதுவும் 2 நாளில் 4300 விசிட்டர்.

reddit.com ல slumdog millionnaire photo க்கு செம்ம ஹிட்.

mixx.com ல இன்னும் கூட்டம் சேர்க்கலை - சேர்த்தால்தான் தெரியும்.

humsurfer, indianpad, indianbytes ஒன்னும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு தெரியல.

reddit - ல புதிய பதிவராக இருப்பினும் வரவேற்பு கண்ணா பின்னானு இருக்கு.

எனக்கு எதிர்பாராத ஹிட் கொடுத்தவை stumbleupon, reddit தான்.



ஆனால் ஆங்கிலப் பதிவுகளை ஆங்கில திரட்டிகளில் பதியும் போது மாலை 6:00 மணிக்கு மேலே பதிந்தால்தான் ஹிட் வருகிறது. இல்லாவிட்டால் பூஜ்யம்

டிவிஎஸ்50 said...

விளக்கத்திற்கு மிக்க நன்றி நண்பரே...

Unknown said...

நல்ல உபயோகமான தகவல் நண்பரே.

kaja nazimudeen said...

நன்றிகள் பல உங்களின் கட்டுரைக்கு!
பயனுள்ள கட்டுரை.
"தமிழ்நெஞ்சம்" அவர்களின் கட்டுரை யாவையும் தொடர்ந்து படித்து வரும் "நண்பன்" நான்!

சுந்தர் said...

தயவு செஞ்சு முதல் பின்னூட்டத்தை எடுங்கள் நண்பரே., pkp.தமிழ்நெஞ்சம் இவர்களுக்கு அடுத்து எளிய நடையில் என்னை போன்ற கணினி அறிவற்றவர்கள் புரிந்து கொள்ள , நன்றாக எழுதுகிறீர்கள்., அடிக்கடி பதிவு போடுங்கள்.,

டிவிஎஸ்50 said...

ஆதரவுக்கு மிக்க நன்றி தேனீ-சுந்தர் , நசீம் , ரவிசங்கர்

Kannan.s Space said...

neenga mailinator.com ponadhillaiya?

Kannan.s Space said...

neenga mailinator.com ponadhilliya?

Kannan.s Space said...

ஸ்பாம் மெயில்களை தவிர்க்க mailinator. com போகலாமே என்ற என் comment ஐ காணோமே?