ஆப்பிளின் ஐபேட் - காமெடி பீஸ்?

ஓவர் சீன் ஒடம்புக்கு ஆகாது? மிகப்பெரிய 'பில்டப்' கொடுத்து பெரிய நட்சத்திரங்களின் தமிழ்ப் படங்கள் வந்து சக்கையாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் போகும் போது நமது தமிழ் வலைப்பதிவர்கள் அதனை துவைத்து காயப்போடுவதை பார்த்திருக்கிறோம்.

அதே போன்ற நிலைமை தற்போது ஆப்பிளின் ஐபேடுக்கும் நேர்ந்திருக்கிறது.ஆப்பிள் நிறுவனமும் ஏதோ ஒன்றை ரிலீஸ் செய்ய போகிறோம் என்று ஒரு மாதமாகவே பில்டப் கொடுத்து வந்ததது. அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். அது அப்படி இருக்குமோ? இப்படி இருக்குமோ? என்று ஆங்கில தளங்களும், வலைப்பதிவர்களும் எழுதி தீர்த்தனர்.

 ஐபேடின் பெருமைகளை அள்ளி விட்டு ஜனவரி 27 அன்று அறிமுகம் செய்தார்கள். மக்களை திருப்தி படுத்தியதா என்ற கேள்விக்கு மெல்ல மெல்ல பதில்கள் வந்து கொண்டு இருக்கின்றன. நேற்று ஆப்பிளின் ஐபேட் விரிவான அறிமுகம் என்று அதன் நிறை குறைகள் பற்றி ஒரு இடுகை எழுதி இருந்தேன். குறைகள் பெரியனவாய் பெரும்பாலானோரை அதிருப்திக்கு உள்ளாக்கி இருப்பதை காண முடிகிறது.

இதன் பிரதிபலிப்பாக ஹிட்லர் ஆப்பிள் ஐபேடுக்கு எதிராக கொதித்து எழுவதாக வீடியோக்கள் யூடியுபில் வருகின்றன. எப்படியெல்லாம் யோசிக்குறாங்க! காமெடிக்கு கியாரண்டி. நீங்களும் பாருங்கள்.


மேலும் பார்க்க இங்கே செல்லுங்கள்.

முந்தைய இடுகையில் நான் குறிப்பிட்டு இருந்த குறைகளை இங்கே தருகிறேன்.

மல்டிடாஸ்கிங் (Multitaking) கிடையாது. ஒரே நேரத்தில் பல செயலிகளில் (Application) வேலை செய்ய இயலாது. எளிமையாக சொல்ல வேண்டும் எனில் நீங்கள் பாடல் கேட்டு கொண்டே இணையத்தில் உலவவோ, ஈபுக் படிக்கவோ முடியாது. ஒரு நேரத்தில் ஒரு வேலை மட்டும்தான்.
வெப்கேம் இல்லாததால் வீடியோ சாட்டின் செய்ய இயலாது. 3G மாடலாக வந்தாலும் அதை நீங்கள் இணைய இணைப்புக்கு மட்டுமே பயன்படுத்தி கொள்ள முடியுமே தரவிற போன் அழைப்புகள் (Phone Calls), குறுஞ்செய்தி (SMS) சேவை முதலியவற்றை பயன்படுத்த இயலாது.
நேரடியாக USB க்களை ஐபேட்டில் பயன்படுத்த இயலாது, அதற்கென தனியே அடாப்டர் தேவைப்படும். Flash சப்போர்ட் கிடையாது. இணையதளங்களில் உள்ள பிளாஷ் பகுதிகள் தெரியாது. புரியும்படி கூற வேண்டும் என்றால் இணையப்பக்கங்களில் உள்ள Flash வீடியோக்களை பார்க்க இயலாது.
16GB, 32GB, 64GB போன்ற அளவுகளில் கிடைக்கிறது. இருந்தாலும் நீங்கள் தனியே மெமரி கார்ட் வாங்கி இதனை மேம்படுத்தி (Upgrade) கொள்ள முடியாது.
ஐபேட்டின் இயங்குதளம் ஐபோன் போன்று கட்டுப்பாடுகளை உடையது. அவற்றிற்கு யார் புதிய செயலிகளை வெளியிட்டாலும் ஆப்பிள் அனுமதித்தால் மட்டுமே அவற்றை ஐபேட்டில் பயன்படுத்த முடியும். ஐபோனுக்கான கூகுளின் அருமையான பல செயலிகளை (Applications) கூட ஆப்பிள் மட்டுறுத்தியிருக்கிறது.
எனவே ஆப்பிள் என்ன தருகிறார்களோ அவற்றை தான் பயன்படுத்த வேண்டுமே தவிர மற்ற கணினிகள் போன்று பிறர் செயலிகளை ஐபேட்டில் பயன்படுத்த இயலாது. உதாரணத்திற்கு நீங்கள் மைக்ரோசாப்ட் வோர்ட் (Microsoft Word), பயர்பாக்ஸ் விரும்புபவர் என்றால் அதனை ஐபேட்டில் உபயோகிப்பதற்கான வாய்ப்பு கிடையாது. 

கூகுளில் 'Apple IPad Rant' என்று தேடிப்பார்த்தால் இணைய பயனர்களின் எதிர்வினை பற்றி நன்றாக அறிந்து கொள்ள முடியும். எந்த தயாரிப்பு வந்தாலும் வாழ்த்தி வரவேற்கும் இணையதளங்களும் தனது அதிருப்தியை பலமாக வெளிப்படுத்தி உள்ளன. சில பிரபல ஆங்கில தளங்கள் தந்துள்ள கருத்துக்களுக்கான சுட்டிகளை தருகிறேன்.

IO9Why The iPad Is Crap Futurism, TechTeamThe Problem with the Apple, LifeHackerThe Problem with the Apple iPad, Mashable The Anti-Hype: Why Apple’s iPad Disappoints, Gizmodo8 Things That Suck About the iPad, Gizmodo -The iPad Is The Gadget We Never Knew We Needed, CNet10 things Netbooks still do better than an iPad

ஐபோன் வெளிவந்த போது இந்த அளவுக்கு இல்லை என்றாலும் ஓரளவு புகைச்சல்கள் வெளிவரத்தான் செய்தன. அவற்றை எல்லாம் மீறி ஐபோன் மொபைல் சந்தையில் காலூன்றி நிற்கிறது. ஆனால் ஐபேட் அந்த அளவு எடுபடுமா? என்பது சந்தேகத்திற்கு உரியதே.

இந்நேரத்தில் மற்றொன்றையும் சொல்ல வேண்டும். விண்டோஸ் ஏழை இயங்குதளமாக கொண்டு ஐபேடை போன்ற சாதனம் HP Slate இந்த ஆண்டு இறுதிக்குள் வெளி வரப்போகிறது. விண்டோஸ் 7 இருப்பதால் நாம் ஐபேடில் கூறிய குறைகள் எதுவும் இருக்கப் போவதில்லை. ஆனால் என்ன மைக்ரோசாப்ட் இயங்குதளங்கள் வைரசால் அடி வாங்குவது வழக்கம் பொறுத்துக் கொண்டால் போதும் :) .

தொடர்புடைய இடுகைகள்

Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

5 comments:

எப்பூடி..... said...

எனக்கும் ipad பயன்பாடு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை !!!!
i phone னுக்கும் i pad இக்கும் 6 வித்தியாசம் சொல்லமுடியுமா ??
அதை போன்று நிறைய வீடியோகள் youtube காணபடுகின்றன ;-)
உட்காந்து யோசிப்பகளோ !!!!!
பகிர்வுக்கு நன்றி

டிவிஎஸ்50 said...

வித்தியாசங்கள் என்றால் ஐபேட் அளவு பெரியது, ஐபோனை விட வேகமான 1GHz பிராசசர். ஐபேடுக்கு எக்ஸ்டர்னல் புளுடூத் கிபோர்ட் உண்டு. ஐபேடில் போன் பண்ணவோ, குறுஞ்செய்தி அனுப்பவோ முடியாது.

செயல்பாடுகளில் பெரிய வித்தியாசம் இருக்குமா என்று தெரிய வில்லை.

எப்பூடி..... said...

பாஸ்!!! 3+ தான் சொல்லி இருகிறிங்க ;-)

// செயல்பாடுகளில் பெரிய வித்தியாசம் இருக்குமா என்று தெரிய வில்லை.//

சரியாக சொல்லி இருகிறிங்க

இதனால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை என்று தான் தோன்கிறது!!! i-phone போதும் :-)
இதனால் ஆப்பிள் லுக்கு தான் இலாபம் என்பது எனது தாழ்மையான கருத்து

டிவிஎஸ்50 said...

எப்பூடி.... மூணுக்கு மேல வர மாட்டேங்குதே. :)

பெரிய ஐபோன் வேணும்னா காசு நிறைய வச்சி இருந்தால் ஐபேட் வாங்கி பயன்படுத்தி பாருங்க.

இல்லன்னா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. விலை கம்மியா இது போன்ற தயாரிப்புகள் மற்ற நிறுவனங்களிடம் இருந்து வரும். உங்கள் கணினியில் பயன்படுத்தும் அனைத்து மென்பொருள்களையும் அதில் பயன்படுத்தி கொள்ளலாம்.

எப்பூடி..... said...

//பெரிய ஐபோன் வேணும்னா காசு நிறைய வச்சி இருந்தால் ஐபேட் வாங்கி பயன்படுத்தி பாருங்க.
//
ஹ ஹா ஹா நல்ல பாயிண்ட் உங்கள் பதிவுகள் எல்லாமே பயனுடையவவாக உள்ளன