பிளாக்கரில் இடுகைகளை பிடிஎப் கோப்பாக சேமிக்க வசதி

வலைப்பதிவர்கள் ஒவ்வொருவருக்கும் தனது படைப்பை அதிக வாசகர்களிடம்  கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். வலைப்பதிவிற்கு டிராபிக்கை அதிகரிப்பது தொடர்பாகவும், RSS ஓடை சேவை பற்றியும் ஏற்கனவே பல இடுகைகள் எழுதி இருந்தேன்.

நமது இடுகைகளை வாசகர்களுக்கு பிடிஎப் கோப்பாக வழங்குவது மூலம் நமது எழுத்துக்களை மேலும் சிலரிடம் கொண்டு சேர்க்க முடியும். அதனை உங்கள் வலைப்பதிவில் நிறுவுவது எப்படி? என்பதனை பற்றி இந்த இடுகையில் பார்ப்போம்.

வாசிப்பவருக்கு ஓர் இடுகை பிடித்துப் போனால் அந்த இடுகையை தனது கணினியில் வாசிப்பிற்காக சேமித்து கொள்ள விரும்புவார். இணைய உலாவிகளில் இணையப் பக்கத்தை சேமிக்கும் போது இணைய பக்கம் தனியாகவும், அதில் உள்ள படங்கள் தனியாகவும் சேமிக்கப்படும். இடுகைப் பக்கத்தின் பல பகுதிகள் முழுமையாக சேமிக்கப்படாது. இப்படி சேமிக்கப்பட்ட HTML பக்கங்களை அவர் இணைய இணைப்பு இல்லாத ஒரு நண்பருடன் பகிர்ந்து கொள்ளுவது சற்றே சிக்கலான விஷயம்.

இதற்கு பதிலாக நமது இடுகைப் பக்கத்தை ஒரே கோப்பாக PDF வடிவில் கொடுத்தால் அவருக்கு எளிமையாக இருக்கும். அந்த கோப்பை அவர் மற்றவருடன் பகிர்வதன் மூலம் உங்கள் இடுகை பலரை சென்றடையும். இணைய பரிச்சயம் இல்லாதவர் கூட உங்கள் இடுகைக்கான PDF கோப்பை வாசித்து கொள்ள முடியும்.

இணையப்பக்கங்களை பிடிஎப் கோப்பாக சேமிப்பது பற்றி ஒரு இடுகை எழுதி இருந்தேன். படிக்கவும். அதன் மூலம் எந்த இணையப் பக்கத்தையும் கணினியில் பிடிஎப்பாக சேமித்து கொள்ளலாம். உங்கள் பதிவுக்கு வரும் அனைவரும் இந்த வசதி பற்றி அறிந்து இருப்பார்களா என்றால் சந்தேகம்தான்.

அதனால் உங்கள் பதிவின் ஒவ்வொரு இடுகையின் கீழும் பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதியை அளித்து விட்டால் உங்கள் வாசகர்களுக்கு எளிதாக இருக்கும். நமது இந்த TVS50 வலைப்பூவின் ஒவ்வொரு இடுகையின் கீழும் 'தொடர்புள்ள இடுகைகள்' பகுதிக்கு கீழே பாருங்கள்.  'Download As PDF' என்ற வசதி இருக்கும்.


உங்கள் பிளாக்கர் வலைப்பதிவில் இந்த வசதியை கொண்டு வர உங்கள் வலைப்பதிவின் வார்ப்புரு நிரலில் சில வரிகளை சேர்த்தால் போதுமானது. உங்கள் பிளாகரின் டாஷ்போர்டு சென்று Layout --> Edit HTML கிளிக் செய்து கொள்ளுங்கள். தோன்றும் பக்கத்தில் 'Expand Widget Templates' என்ற ஆப்சனையும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.


கிடைக்கும் வார்ப்புரு நிரலில் <data:post.body/> என்ற வார்த்தையை தேடுங்கள். அதன் கீழே, கீழ்காணும் வரிகளை காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள்.

<a expr:href='&quot;http://pdfmyurl.com?url=&quot; + data:post.url'>Download As PDF</a>


இப்போது 'Save Template' கிளிக் செய்து உங்கள் வார்ப்புருவை சேமித்து கொள்ளுங்கள். வேலை முடிந்தது.

இனி உங்கள் ஒவ்வொரு இடுகையின் கீழேயும் பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF' என்ற சுட்டியாக வழங்கப்பட்டு இருக்கும். அந்த சுட்டியை கிளிக் செய்யும் போது உங்கள் இடுகைப்பக்கம் பிடிஎப் கோப்பாக கணினியில் தரவிறக்கப்படும்.

இதனை செயல்படுத்துவதில் குழப்பங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் கேட்கவும். உதவுகிறேன்.

தொடர்புடைய இடுகைகள்

Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

14 comments:

தமிழினியன் said...

நல்ல அறிமுகம் தோழா,நன்றிறி

டிவிஎஸ்50 said...

வருகைக்கு நன்றி சுப.தமிழினியன்

கிரி said...

நன்றி. தேவைப்படும் போது பயன்படுத்திக்கொள்கிறேன்

தமிழ்மகன் said...

Good.
How to show vote results of tamilish, ulavu etc in our posts?

Anonymous said...

நன்றி நண்பரே!நல்ல பயனுள்ள தகவல்.தொடர்க தங்கள் பனி.

CM ரகு said...

i am a regular reader of ur blog.u r really superb.all posts are/were very much informative.Me too got inspiration to start a blog with useful info in tamil-will do it soon. Thanks a lot.while downloading ur blog posts, its downloaded with .html extension. while opening nothing is there in readable format.i think this is because of tamil font pbms. pls do the needful...thanks again

HK Arun said...

அன்புடன் tvs50

உங்களின் இவ்விடுகை "பிளாக்கரில் இடுகைகளை பிடிஎப் கோப்பாக சேமிக்க வசதி" நான் அறிந்திராத தகவல்களில் ஒன்று. அவசியமாகி இருந்த தகவல்களிலும் ஒன்று. தற்போது இதன் பயனை நானும் பயன்படுத்தியுள்ளேன்.

உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி

அன்புடன்
அருண் | HK Arun

வரதராஜலு .பூ said...

மிகவும் உபயோகமானதொரு பதிவு.

மிக்க நன்றி. எனது பிளாகில் உபயோகப்படுத்திவிட்டேன்.

http://varadaradj.blogspot.com

Lucky Limat - லக்கி லிமட் said...

அருமையான அறிமுகம் நண்பரே

அன்புடன்,
லக்கி லிமட்

- யெஸ்.பாலபாரதி said...

நன்றி நண்பரே.. இதே போல நான் பயன்படுத்தி வரும் வேர்ட்பிரசில் செய்ய ஏதாவது வ்ழி உள்ளதா? அறியத்தந்தால் மகிழ்வேன்.

நன்றி!

தோழன்

பாலா

டிவிஎஸ்50 said...

மறுமொழிகளுக்கு நன்றி நண்பர்களே.

பாலா , நீங்கள் கேட்டதற்கு விரைவில் ஒரு இடுகை எழுதுகிறேன்.

தென்றல் said...

அருமை..மிக்க நன்றி!

Anonymous said...

ஐயா,நான் aagamakadal என்ற வலைப்பூவை எழுதுகிறேன்.என்னுடைய வலைப்பதிவை PDF பாக மாற்ற தாங்கள் எழுதிய படி முயற்சித்தேன்.ஆனால் அவ்வாறு PDFவடிவில் மாறவில்லை.தயவுசெய்து எனக்கு விளக்கவும்

Anonymous said...

ஐயா,நான் aagamakadal என்ற வலைப்பூவை எழுதுகிறேன்.என்னுடைய வலைப்பதிவை PDF பாக மாற்ற தாங்கள் எழுதிய படி முயற்சித்தேன்.ஆனால் அவ்வாறு PDFவடிவில் மாறவில்லை.தயவுசெய்து எனக்கு விளக்கவும்