75 லட்சம் ரூபாய்க்கு நோக்கியா மொபைல்

ஆடம்பரம். போதை தரக்கூடிய விசயம்தான். தேவைக்கு அதிகமாய் பணம் கொட்டி கிடக்கும் போது அதை விட்டெறிந்து தன்னைத்தானே திருப்தி படுத்தி கொள்ள உதவும் ஒரு மருந்து என்றும் கூறலாம்.

ஆடம்பர விரும்பிகளை குறிவைத்து உலகமெங்கும் பல வியாபாரங்கள் நடந்து வருகின்றன. அதை அந்த கோடீஸ்வரர் ஏலம் எடுத்தார், இதை இந்த கோடீஸ்வரர் ஏலம் எடுத்தார் என்று ஊடகங்களில் காண முடிகிறது. இவர்களை குறி வைத்து வர்த்தக நிறுவனங்கள் லிமிட்டெட் எடிசன் (Limitted Edition) என்று தங்களது தயாரிப்புகளை சந்தைப்படுத்துவர். இவற்றை வாங்கி உபயோகிப்பது பெருமை என்ற எண்ணம் நிலவுகிறது.

கார்களில் இது போன்ற லிமிட்டெட் எடிசன் தயாரிப்புகளை கண்டிருக்கிறேன். இணையத்தில் உலவி கொண்டிருந்த போது நோக்கியா நிறுவனத்தின் மொபைல் ஒன்று லிமிட்டெட் எடிசனாக மொத்தம் மூன்று மட்டும் வெளியிடப்பட்டுள்ள செய்தியை கண்டேன். அதன் பெயர் நோக்கியா சுப்ரீம்.



12.5 காரட் பிங்க் வைரங்கள், 1225 பவளங்கள் பதித்து அலங்கரிக்கப்பட்டு வருகிறது. நடுவில் உயர்தர 3 காரட் சிங்கள் கட் வைரம் பதிப்பட்டு உள்ளது. மொத்தத்தில் 83 கிராம் பிளட்டினத்தால் உருவாக்கப்பட்டு உள்ளது. இது குறித்த மேலும் விவரங்கள் இந்த சுட்டியில் உள்ளன.

உலக அளவில் இந்த மொபைல் மூன்றே மூன்று மட்டும் வெளியிடப்பட்டு உள்ளதால், இதை வாங்கினால், உங்களை தவிர இந்த மொபைலை உலகில் இருவர் மட்டுமே வைத்து இருப்பார். இது தான் இதன் பெருமை (!?) . இதன் விலை இந்திய ரூபாயில் 75 லட்சம் மட்டுமே.

ஆன்லைனில் வாங்க இந்த சுட்டிக்கு செல்லுங்கள். வாங்கினால், இந்த மொபைலுக்கே தனியே ஒரு பாதுகாப்பு படை நியமிக்க வேண்டுமே!

தொடர்புடைய இடுகைகள்

Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

0 comments: