மொபைலில் தமிழ் தளங்களை காண ஸ்கைபயர் உலாவி

மொபைலில் தமிழ் தளங்களை பார்ப்பது பற்றியும், ஒபேரா மொபைல் உலாவி பற்றியும் ஏற்கனவே இடுகைகள் எழுதி இருந்தேன். மொபைல் போன்களில் உபயோகிக்க சிறந்த மற்றொரு இணைய உலாவியை பற்றி இந்த இடுகையில் பார்ப்போம்.

பொதுவாக மொபைல் உலாவிகளில் இணையதளங்கள் முழுமையாக தெரியாது. இணைய பக்கங்களில் உள்ள வீடியோக்களை காண முடியாது. இணையதளங்களின் வசதியை முழுமையாக உபயோகிக்க முடியாது. இது போன்று சில குறைபாடுகள் மொபைல் உலாவியில் உண்டு.

ஸ்கைபயர் (Skyfire). கணினியில் இணையதளங்கள் தெரிவது போன்று ஸ்கைபயர் மொபைல் உலாவியில் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. யூடியுப் போன்ற வீடியோ தளங்களில் வீடியோக்கள் உலாவியின் உள்ளேயே ப்ளே ஆகின்றன. மொத்தத்தில் ஓரளவுக்கு கணினியில் பிரவுசிங் செய்வது போன்ற அனுபவத்தை ஸ்கைபயர் தருகிறது.

ஸ்கைபயரின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு 1.5 சிம்பியன் இணையங்குதளத்தை உபயோகிக்கும் மொபைல் போன்களுக்கு என்று வெளியாகி உள்ளது. இது தொடுதிரை (Touch Screen) மொபைல்களையும் ஆதரிப்பது சிறப்பம்சம்.


தமிழர்களாகிய நமக்கு ஸ்கைபெயரில் சிறப்பம்சம் என்னவெனில் தமிழ் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. பொதுவாக ஒபேரா மினி தவிர மற்ற மொபைல் உலாவிகளில் தமிழ் இணைய தளங்களை பார்க்க முடியாது. ஒபேரா மினி இணைய உலாவியில் தமிழ் தளங்களை காண சிறிய மாற்றம் செய்ய வேண்டும். ஆனால் ஸ்கைபயர் இணைய உலாவியில் எந்த மாற்றமும் செய்ய தேவை இல்லை.

நீங்கள் மொபைல் போனில் இணையம் உபயோகிப்பவராக இருந்தால் நீங்கள் கண்டிப்பாக சோதித்து பார்க்க வேண்டிய இணைய உலாவி ஸ்கைபயர். இது நிச்சம் உங்களை கவரும்.

ஸ்கைபயரின் இணையதளம். உங்கள் கணினியில் தரவிறக்க இந்த சுட்டிக்கு செல்லுங்கள். தரவிறக்கிய பின் உங்கள் மொபைலுக்கு மாற்றி நிறுவி கொள்ளுங்கள். நேரடியான உங்கள் மொபைலில் இருந்து ஸ்கைபயரை தரவிறக்க உங்கள் மொபைலில் இருந்து இந்த m.skyfire.com முகவரியை அணுகுங்கள். உங்கள் மொபைலுக்கு ஏற்ற பதிப்பு தரவிறக்கப்பட்டு நிறுவப்படும்.


தொடர்புடைய இடுகைகள்

Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

7 comments:

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

கைப்பேசிகளில் தமிழில் எழுதும் மென்பொருள்கள் எதுவும் உள்ளதா?

இருப்பின் அறியத்தரவும்,நன்றி.

enmadal@yahoo.com

A.V.Roy said...

அருமை..வாழ்த்துக்கள். opera மூலம் தமிழ் தளங்களை மொபைல் போனில் பார்வை இடுவது பற்றி சொல்ல முடியுமா? i use sony ericsson k530i.

டிவிஎஸ்50 said...

அறிவன்! தற்சமயம் மொபைலில் தமிழ் உள்ளீடு செய்ய எந்த மென்பொருளும் இருப்பதாக தெரியவில்லை.

ராய், ஏற்கனவே எழுதி உள்ளேன். இந்த இடுகையை http://tvs50.blogspot.com/2009/06/problem-view-tamil-fonts-in-mobile.html பார்க்கவும்.

A.V.Roy said...

உங்களின் உதவிக்கு நன்றி.தற்போது எனது போனில் தமிழ் எழுத்துக்களை வாசிக்க முடிகிறது. உங்களின் சேவை தொடர வேண்டும். வாழ்த்துக்கள்.

ganesh said...

இந்த ஐபோனுக்கு ஏதாச்சும் இருந்தா சொல்லுங்களேன்... புண்ணியமா போகும்.

Anonymous said...

thanks
very useful

www.karurkirukkan.blogspot.com

Anonymous said...

thank u. i got sellinam.