பயர்பாக்ஸில் Goo.gl யுஆர்எல் சுருக்கி

இணைய பக்கங்களுக்கான முகவரியை யுஆர்எல்(URL) என்று அழைக்கிறோம். ஒரு இணையப்பக்கத்தை மற்றவர்களுடன் பகிரும் பொழுது மின்னஞ்சல், டிவிட்டர், புக்மார்க் தளங்கள் உள்ளிட்ட ஊடகங்கள் வழியாக அந்த இணைய முகவரியை அனுப்பி வைப்போம்.

மிகப்பெரிய இணைய பக்க முகவரிகளை அனுப்பும் போது அவை சில நேரம் சிதைந்து சரியான முகவரி சென்றடையாது. சில நேரம் பெரிய யுஆர்எல்களை சுருக்கி அனுப்பினால் வசதியாக இருக்கும். இது போன்ற பெரிய யுஆர்எல்களை சுருக்கி அனுப்புவதக்கான சேவையை பல இணையதளங்கள் வழங்கி வருகின்றன.

tinyurl.com, bit.ly போன்றவை இந்த சேவை வழங்குவதில் பிரபலமானவை. இவ்வாறு பல்வேறு யுஆர்எல் சுருக்கி இணையதளங்கள் மூலம் யுஆர்எல் பகிரப்படுவதில் ஒரு பின்னடைவும் உண்டு. இவற்றை உபயோகித்து பல கோடிக்கணக்கான யுஆர்எல்கள் பகிரப்பட்ட பின்பு அந்த இணைய தளம் ஒரு காலத்தில் மூடப்பட்டால் பகிரப்பட்ட யுஆர்எல்கள் வேலை செய்யாமல் போகும். எனவே யுஆர்எல்கலை சுருக்கி பகிரும் போது நம்பகமான , பிரபலமான நல்ல இணைய தளங்களையே தேர்ந்தெடுங்கள். சில யுஆர்எல் சுருக்கி இணைய தளங்களை உபயோகித்தால் அவை மூடப்படும் போது நீங்கள் பகிர்ந்த யுஆர்எல்கள் செயலிழக்கலாம்.

இணைய ஜாம்பவான் கூகிள் இது போன்றதொரு சேவையை வழங்கி வருகிறது. கூகிள் நிறுவனத்தின் மீது நாம் கண்டிப்பாக நம்பிக்கை வைக்கலாம். இந்த சேவைக்கான கூகுளின் தள முகவரி GOO.GL . இது தற்சமயம் பயனர்களின் பொது பயன்பாட்டுக்கு இல்லை. ஆனால் பயர்பாக்ஸ் இணைய உலாவி மூலம் நீங்கள் இதனை எளிதாக உபயோகித்து கொள்ள முடியும்.

இதனை பெற goo.gl Lite எனும் பயர்பாக்ஸ் நீட்சியை இந்த சுட்டியில் இருந்து தரவிறக்கி உங்கள் பயர்பாக்சில் நிறுவி கொள்ளுங்கள். உங்கள் பயர்பாக்சை மீள்துவக்கி (Restart) கொள்ளுங்கள். இப்போது மெனு பாரில் View --> Toolbars --> Customize கிளிக் செய்து கொள்ளுங்கள்.



தோன்றும் விண்டோவில் Goo.gl ஐகானை Drag செய்து உங்கள் புக்மார்க் டூல்பாரில் விட்டு விடுங்கள். அவ்வளவுதான் வேலை முடிந்தது.



இனி இதனை எவ்வாறு உபயோகிப்பது என்று பார்ப்போம். நீங்கள் ஒரு இணைய பக்கத்தை பார்வையிட்டு கொண்டிருக்கும் போது அந்த இணைய பக்கத்தில் முகவரியை சுருக்க வேண்டும் என்று விரும்பினால் புக்மார்க் டூல்பாரில் உள்ள Goo.gl ஐகானை கிளிக் செய்தால் போதுமானது. நீங்கள் பார்த்து கொண்டிருந்த முகவரி சுருக்கப்பட்டு உங்கள் கணினியின் கிளிப்போர்ட்டில் (Clipboard) சேமிக்கப்பட்டு விடும். இனி நீங்கள் சாட்டிலோ, டிவிட்டரிலோ, மின்னஞ்சலிலோ வேண்டுமென்ற இடத்தில் பேஸ்ட் செய்து கொள்ள முடியும்.



உதாரணத்திற்கு கூகிள் தேடலில் நான் பார்த்து கொண்டிருந்த தேடல் முடிவுக்கான முகவரி இது. http://www.google.co.in/search?hl=en&client=firefox-a&rls=org.mozilla%3Aen-US%3Aofficial&hs=Ti1&q=tvs+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D&btnG=Search&meta=&aq=f&oq= . இவ்வளவு பெரிய முகவரியை நான் மேற்கண்ட முறை மூலம் சுருக்கி விட்டேன். சுருக்கி கிடைக்கபெற்ற முகவரி http://goo.gl/otIj . இதனை நான் எளிதாக பிறருடன் பகிர்ந்து கொள்ளலாம்.

இது மிகவும் எளிமையான முறை. உபயோகித்து பாருங்கள். பல இடங்களில் இது உங்களுக்கு மிகவும் தேவைப்படும்.

தொடர்புடைய இடுகைகள்

Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

2 comments:

சங்கர் said...

நன்றி தல,

டிவிஎஸ்50 said...

மறுமொழிக்கும் வருகைக்கும் நன்றி ஷங்கர்.