மொபைல் வீடியோவை இணையத்தில் நேரடி ஒளிபரப்ப

சுற்றுலா, பிறந்தநாள், விழாக்கள் போன்றவற்றிற்கு செல்லும்போது அந்த நிகழ்ச்சியை மொபைலில் பதிவு செய்து உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து வந்திருப்போம். மிக வேகமான பகிர்தலுக்கு இணையம் நல்ல ஊடகமாகவே நமக்கு பயன்பட்டு இருக்கிறது.

மொபைலில் எடுக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை உடனுக்குடன் இணையத்தில் ஏற்றுவது பற்றி ஏற்கனவே இடுகைகள் எழுதி இருந்தேன். மொபைலில் எடுக்கும் வீடியோக்களை நேரடியாக இணையத்தில் ஒளிபரப்புவது எப்படி? என்று இப்போது பார்ப்போம்.

இது ஒன்றும் கடினமான வேலை கிடையாது. இதற்கு தேவை கேமரா வசதி உள்ள மொபைல் உள்ள போன், மொபைலில் நல்ல வேகமான (3G or Wifi) இணைய இணைப்பு. இதனை சிறப்பாக செய்வதற்கு இணையத்தில் Qik எனும் இணையதளம் சிறப்பான சேவை வழங்குகிறது.

Qik.com சென்று பயனர் கணக்கு உருவாக்கி கொள்ளுங்கள். நீங்கள் பேஸ்புக், டிவிட்டர் பயனராக இருந்தால் அதனை உபயோகித்து Qik -ல் பயனராகி கொள்ள முடியும். அடுத்து அவர்கள் வழங்கும் சிறிய மென்பொருளை தரவிறக்கி உங்கள் மொபைலில் நிறுவி கொள்ள வேண்டும். எந்தெந்த மொபைல் மாடல்கள் சப்போர்ட் செய்யபடுகிறது என்பதனை இந்த சுட்டியில் காணவும். உங்கள் மொபைல் அந்த பட்டியலில் இருந்தால் மென்பொருளை தரவிறக்கி உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.


இந்த மென்பொருளை உபயோகித்து நீங்கள் எடுக்கும் மொபைல் வீடியோக்களை நேரடியாக இணையத்தில் ஒளிபரப்புங்கள். வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு Qik இணையதளத்தில் ஒளிபரப்பப்படும், சேமிக்கப்படும். உங்கள் ஒளிபரப்பு அனைவரும் பார்க்கும்வண்ணம் பப்ளிக் ஆக அமைந்து இருக்கும். அதனை நீங்கள் அனுமதிப்பவர்கள் மட்டும் பார்க்கும்படி பிரைவேட் ஆக அமைத்து கொள்ளும் வசதியும் உண்டு.

Qik -ல் சேமிக்கப்படும் உங்கள் வீடியோக்களை நீங்கள் பேஸ்புக், ட்விட்டர், யுடியூப் போன்ற சமூக தளங்களில் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் பிளாக்குகளில் Embed செய்தும் கொள்ளலாம். Qik பயனர்களின் நேரடி ஒளிபரப்பு வீடியோக்களையும், சேமிக்க பட்டவற்றையும் இந்த சுட்டியில் காணுங்கள். மொபைல் உபயோகிப்பாளர்கள் இடையே இந்த இணைய சேவை மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.


தொடர்புடைய இடுகைகள்

Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

10 comments:

கிரி said...

TVS 50 கூகிள் நோட்(நெட்)புக்கை பற்றி விரிவா ஒரு பதிவு எழுதுங்களேன்! நான் என் லேப்டாப்பில் இணையம் மட்டுமே அதிகம் பயன்படுத்துகிறேன்.. அப்படி இருக்கும் போது கூகிள் நெட் புக் அதற்க்கு சரியானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். அது பற்றிய விவரங்கள் தெரிந்தால் நன்றாக இருக்கும்

Paleo God said...

தமிழ் மணம் விருதுக்கு வாழ்த்துக்கள்..:))

பாலா said...

தமிழ்மண விருதுக்கு வாழ்த்துகள்! :)

சிங்கக்குட்டி said...

"தமிழ்மணம் 2009 விருது" போட்டியில் வெற்றி பெற்று விருது பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
சிங்கக்குட்டி.

டிவிஎஸ்50 said...

வருகைக்கு நன்றி கிரி.

கூகிள் நெட்புக் இன்னும் வெளிவரவில்லை. கூகிள் குரோம் இயங்குதளம் பற்றி ஏற்கனவே ஒரு இடுகை எழுதி இருந்தேன் . அதில் இது குறித்து சில விஷயங்கள் எழுதி இருந்தேன். வாசித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

பொதுவாக நெட்புக் பற்றி எழுதுவது என்றால் எழுதுகிறேன். அதன் சாதக பாதக அம்சங்கள் குறித்து எழுதலாம்.

டிவிஎஸ்50 said...

பலா பட்டறை, ஹாலிவுட் பாலா, சிங்கக்குட்டி

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பர்களே.

@சிங்கக்குட்டி உங்கள் இடுகை பரிசு பெற்றதில் மட்டற்ற மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்

@ஹாலிவுட் பாலா, தொழில்நுட்பம் குறித்து முன்பெல்லாம் சில இடுகைகள் கலக்கலா எழுதுனீங்க. இப்பவெல்லாம் வெறும் சினிமா இடுகைகள் மட்டும் போடுறீங்க. கொஞ்சம் தொழில்நுட்பமும் எழுதுங்களேன் ப்ளீஸ்.

கிரி said...

//பொதுவாக நெட்புக் பற்றி எழுதுவது என்றால் எழுதுகிறேன். அதன் சாதக பாதக அம்சங்கள் குறித்து எழுதலாம்//

சரி! எழுதுங்கள் தெரிந்து கொள்கிறேன்.

அதில் என்னென்ன செய்யலாம் என்று!

வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் :-)

குப்பன்.யாஹூ said...

we can cary a laptop or blackberry and show that through yahoo chat webcam or gtalk webcam

டிவிஎஸ்50 said...

@கிரி

வாழ்த்துக்கு நன்றி.

நெட்புக் பற்றி தகவல்கள் சேகரித்து முழுமையாக எழுதிகிறேன்.

டிவிஎஸ்50 said...

@குப்பன் யாஹூ

நீங்கள் சொல்லும்படி செய்யலாம். வருகைக்கும், மறுமொழிக்கும் நன்றி.