முடியல... இதுக்கு மேல தாங்காது - சீனாவில் கூகுள்

சீன அரசு எப்போதும் ஊடகங்களை கடமையான சட்ட திட்டங்கள் மூலம் கட்டுபடுத்தி வைத்து இருக்கிறது என்பதும், அங்கு பெருமளவில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வருகிறது என்பதும் பரவலாக உள்ள குற்றசாட்டு. ஊடகங்களை கட்டுப்படுத்தி வைத்து இருந்தாலும் இணையத்தில் தனது அரசை எதிர்த்து எழுதுபவர்களை கட்டுப்படுத்த சீன அரசு போராடித்தான் வருகிறது.

அடிக்கடி இணையதளங்களை தனது நாட்டில் தடை செய்வதும் பின்பு அனுமதிப்பதும் சீனாவில் வழமைதான். உலக பிரபல தளங்கள் பேஸ்புக், டிவிட்டர் சீனாவில் தடை செய்யப்பட்டு உள்ளன. கூகிள் சீனாவின் சட்டதிட்டங்களுக்கு வளைந்து கொடுத்து இது வரை செயல்பட்டு வந்தது. சீன அரசுக்கு எதிரான தேடல் முடிவுகளை வடிகட்டி வழங்கி வந்தது.

சீனாவின் இணைய தேடல் சந்தையில் கூகிள் 26 விழுக்காடும், சீனாவை சேர்ந்த baidu.cn இணையதளம் 60  விழுக்காடு மார்க்கெட்டையும் கொண்டுள்ளன. உலகின் அதிக இணைய பயனர்கள் சீனாவில்தான் உள்ளார்கள். அவர்கள் எண்ணிக்கை 360 பில்லியன். திருட்டு சாப்ட்வேர்கள் அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதும் சீனாவில்தான். மைக்ரோசாப்ட் மிக குறைந்த விலையில் அங்கே தனது இயங்குதளத்தை வெளியிட்டு மென்பொருள்களை விற்க முயற்சித்தாலும் பெரிய அளவில் ஒன்றும் சாதிக்க முடியவில்லை.

சீனாவில் இணைய தடை என்பது இரண்டு விதங்களில் இருக்கிறது. ஒன்று தகாத இணையதளங்களை மொத்தமாக சீன பயனர்கள் அணுக முடியாதபடி தடை செய்து விடுவது. உதாரணத்திற்கு Facebook, Twitter, IMDB, BBC இணையதளங்கள் சீனாவில் அணுக முடியாதபடி முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

அடுத்தது தேடியந்திரங்களில் ஆட்சேபகரமான சில வார்த்தைகளை தேடும் போது தேடல் முடிவுகளில் சில தளங்களின் முடிவுகள் தோன்றாதபடி வடிகட்டி தணிக்கை செய்யும்படி தேடியந்திரங்களை கட்டாயபடுத்துவது. சீனாவில் இணைய தேடியந்திரங்களில் தடை செய்யப்பட்டுள்ள வார்த்தைகளுக்கான விக்கிபீடியா சுட்டி. தனது நாட்டை பற்றி செய்திகளை வெளியே கசிய விட விரும்பாத ரகசிய நாடாகவே சீனா திகழ்ந்து வருகிறது. தடை செய்யப்பட்ட இணையதளங்கள் மற்றும் வார்த்தைகள் பற்றிய விபரம் இங்கே இருக்கிறது.

இவ்வளவு காலம் இவற்றிற்கு கட்டுப்பட்டு செயல்பட்டு வந்த கூகிள் சீனாவுக்கான தனது இணையதளம் Google.cn ஐ மூடலாம் என்றும் சீனாவில் தனது செயல்பாடுகளை மூடிவிட்டு வெளியேற நேரலாம் என்றும் 'சீனாவுடன் புதிய அணுகுமுறை' என கூகிள் தனது வலைப்பதிவில் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சீன மனித உரிமைக்காக போராடுபவர்கள் ஜிமெயில் விவரங்களை திருடும் விதமாக அமைந்த சைபர் தாக்குதலே இதற்கு காரணம் என்று கூகிள் தெரிவித்து உள்ளது. இந்த தாக்குதலின் மூலம் சீனா என்று கூகிள் தெரிவிக்கிறது.

கூகிள் மேலும் தெரிவித்து உள்ளதாவது. சைபர் தாக்குதல் நடத்தியவர்கள் தங்கள் நோக்கத்தை அடையவில்லை. இரண்டு ஜிமெயில் கணக்குகள் மட்டும் பாதிப்புக்கு உள்ளானதாகவும், அவற்றிலும் அந்த ஜிமெயில் கணக்குகளின் சப்ஜெக்ட் தலைப்பு மட்டும் களவு போனதே தவிர மெயில்களின் உள்ளடக்கம் பாதுகாக்கப்பட்டதாக கூறுகின்றனர். கூகிள் மீது மட்டுமன்றி இருபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது இது போன்ற தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு தகவல்கள் திருடப்பட்டு உள்ளன. இது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக கூகிள் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இந்த சைபர் தாக்குதல், பயனர்களின் கருத்துரிமை ஆகியவற்றை காரணமாக சொல்லி இனி மேலும் இது போன்ற தேடல் முடிவுகளில் வடிகட்டல் வேலையை தொடரப் போவதில்லை என்று அறிவித்து உள்ளார்கள். இதனால் சீனாவில் இருந்து வெளியேற நேரிட்டாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு வந்திருப்பதாக கூகிள் தெரிவிக்கிறது.

இணைய பயனர்கள் நல்ல ஆண்டிவைரஸ் நிறுவி கொள்ளும்படியும், இயங்குதளங்களின்  அப்டேட்சை தொடர்ந்து கணினியில் நிறுவி கணினி பாதுகாப்பை மேம்படுத்தி கொள்ளும்படி அறிவுரை வழங்கி உள்ளனர். ஈமெயில், சாட் பகிரப்படும் சுட்டிகளை கிளிக் செய்வதிலும், பாஸ்வர்ட், தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் பகிருவதிலும் கவனம் கொள்ளும்படியும் அறிவுறுத்துகிறது

கூகுளின் இந்த முடிவுக்கு இது அமெரிக்கர்களின் வழமையான வியாபார தந்திரம் என்று ஒரு சாரார் கருத்து தெரிவித்து உள்ளார்கள். 2006 முதல் முழு மூச்சுடன் சைனாவில் அதிகம் செலுத்த முயன்று வரும் கூகுளால் அந்த நாட்டின் தேடியந்திரம் baidu.cn ஐ வீழ்த்த முடியவில்லை. அங்கே  லாபகரமாகவும் தொழில் நடத்த முடியவில்லை.  சீ... ச்சீ இந்த பழம் புளிக்கும் என்று கூகிள் வெளியேறும் முடிவை எடுத்து இருப்பதாக கூறுகின்றனர். உலக பொருளாதாரத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் சீன சந்தையை விட்டு வெளியேறுவது கூகுளுக்குதான் பாதிப்பே அன்றி சீனாவுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பது அவர்கள் கருத்து.

சர்வதேச வர்த்தக முறைக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் என அமெரிக்க அரசு சீனாவிடம் விளக்கம் கேட்டு உள்ளது. இணைய பாதுகாப்புக்கு சீனர்கள் ஊறு விளைவிப்பவர்கள் என்ற பொதுவான கருத்துக்கு மேலும் வலு சேர்ப்பதாக கூகுளின் இந்த முடிவு அமைந்துள்ளது. கூகுளை 'அமெரிக்க உளவாளி' என்று சொல்லி, கூகிள் வெளியேறுவது நல்லதுதான் என்று சீனர்கள் சிலரும் எழுதி வருகின்றனர்.  எது எப்படியோ கூகுளின் இந்த முடிவு மிக முக்கிய விசயமாகவே இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய இடுகைகள்

Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

2 comments:

ஜோதிஜி said...

நீங்கள் சுடுதண்ணி இடுகையில் விமர்சித்ததை போலவே நான் உங்கள் பதிவுகளை தொடர்ந்து மின் அஞ்சல் வாயிலாக படித்து வருகின்றேன். நான் உங்கள் வாசகன். என்னைப் போன்றவர்களுக்கு, குறிப்பாக இந்த சீனா கூகுள் விசயங்கள் இதுவரை படித்ததை விட மிக எளிமையாக புரிய வைத்தமைக்கு நன்றி.

வாழ்த்துகள்

டிவிஎஸ்50 said...

கருத்துரைக்கு மிக்க நன்றி ஜோதிஜி