இந்த துறையில் எனக்கு எவ்வித அனுபவமும் இல்லை என்பதால் அதற்கான உதவி செய்ய இயலாது இருந்தது. இன்று நேரம் கிடைத்த போது இணையத்தில் தமிழ் எழுத்துருக்களுக்காக தேடினேன். சில நல்ல எழுத்துருக்கள் கிடைத்தன. அவற்றை பகிர இந்த இடுகை.
தமிழ் யூனிகோட் எழுத்துருக்களை பொறுத்தவரை சிலர் தன்னார்வத்தில் பல எழுத்துருக்களை அறிமுகப்படுத்தி உள்ளனர். அந்த எழுத்துருக்களை அறிந்து கொள்ள அழகி இணையதளத்தின் இந்த பக்கம் மிகவும் உதவியது.
ஹாய்கோபி இணையதளத்தில் அட்டகாசமான சில எழுத்துருக்களை காண நேர்ந்தது. மொத்தம் பத்து எழுத்துருக்கள் உள்ளன. இந்த சுட்டிக்கு சென்று உங்களுக்கு தேவையானவற்றை தரவிறக்கி கொள்ளுங்கள். எழுத்துருக்களின் மாதிரி வடிவ படங்களும் அந்த பக்கத்தில் உள்ளன.
ILDC தளத்தின் இந்த சுட்டியில் மொத்தம் ஐம்பது எழுத்துருக்கள் உள்ளன. அனைத்து ஒருங்கிணைக்கப்பட்டு ZIP வடிவில் கிடைக்கின்றன. நேரடியாக தரவிறக்க இந்த சுட்டியை கிளிக் செய்யவும். தரவிறக்கிய பின் ZIP கோப்பை தனியே ஒரு போல்டரில் Extract செய்து கொள்ளவும். இந்த எழுத்துருக்களின் மாதிரி வடிவங்களை இந்த சுட்டியில் காணவும்.
மேலும் சில தமிழ் யூனிகோட் எழுத்துருக்கள் இந்த சுட்டி, இந்த சுட்டிகளில் உள்ளன. மாதிரி வடிவங்களும் உள்ளன. தேவையானவற்றை தரவிறக்கி கொள்ளுங்கள்.
தரவிறக்கிய இந்த எழுத்துருக்களை உங்கள் விண்டோஸ் கணினியில் நிறுவுவது எப்படி? என்று பார்ப்போம். தரவிறக்கிய அனைத்து எழுத்துருக்களையும் ஒரே போல்டரில் போட்டு வைத்துக் கொள்ளவும். அனைத்து எழுத்துரு கோப்புகளையும் செலக்ட் செய்து Copy செய்து கொள்ளவும். Copy செய்த இந்த கோப்புகளை My Computer திறந்து கொண்டு C: -> Windows -> Fonts என்ற போல்டரில் பேஸ்ட் செய்து கொள்ளவும்.
இனி எழுத்துருக்களை நீங்கள் உபயோகிக்க விரும்பும் இடங்களில் நீங்கள் நிறுவிய எழுத்துருக்கள் கிடைக்கும்.
இந்த அருமையான எழுத்துருக்களை உருவாக்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்ளுவோம். உங்களுக்கு மேலும் தமிழ் யூனிகோட் எழுத்துருக்கள் தெரிந்திருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். பலருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும்.
4 comments:
மொபைல் போனுக்கு யுனிகோட் எங்காவது கிடைக்கிறதா ?
மொபைல் போனுக்கு யுனிகோட் எங்காவது கிடைக்கிறதா ?
பாஸ்கர் பெரும்பாலான மொபைல்கள் யூனிகோட் எழுத்துருக்களை ஆதரிப்பதில்லை. தமிழ் மொழிக்கென பிரத்தியேகமாக வரும் மொபைல் போன்களில் தமிழ் எழுத்துரு உண்டு.
நீங்கள் மொபைல் போனில் தமிழ் இணைய பக்கங்களை வாசிக்க வேண்டுமெனில் ஒபேரா மினி உபயோகியுங்கள். இந்த இடுகையை பாருங்கள். இதிலும் தமிழ் எழுத்துகள் படங்கள் போன்றே தோன்றுமே தவிர. எழுத்துருவாக தொடராது.
e-kalallapai software is available for easy typewriting in tamil
Post a Comment