இவ்வாறு பவர்பாய்ன்ட் மூலம் உருவாக்கிய கோப்புகளை மற்ற கணினிகளில் வேலை செய்ய வைக்க அந்த கணினிகளில் பவர்பாய்ன்ட் அல்லது பவர்பாய்ன்ட் வியுவர் தேவைப்படும். இவற்றை வீடியோ கோப்புகளாக மாற்றுவது பவர்பாயிண்ட்டில் இயலாத காரியம். வீடியோவாக மாற்றினால் கணினி, மொபைல் டிவிடி பிளேயர் என்று பயன்படுத்தி கொள்ளலாம்.
Leawo PowerPoint to Video Free. இந்த இலவச மென்பொருள் மூலம் மேற்சொன்ன வேலையை செய்ய வைக்க முடியும். பவர்பாய்ன்ட் கோப்புகளை ASF, WMV, 3PG, 3G2 வீடியோ கோப்புகளாக மாற்றிக் கொள்ளலாம். இந்த மென்பொருளை இந்த சுட்டியை கிளிக் செய்து தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள்.
PPT, POT, PPTX, PPS என்று அனைத்து விதமான பவர்பாயிண்ட் கோப்புகளையும் ஆதரிக்கும். அனைத்து அனிமேஷன்களும் வேலை செய்யும். வீடியோவிற்கு இசையை தனி டிராக்காக சேர்த்து கொள்ளலாம். இவ்வாறு உருவாக்கப்பட்ட வீடியோக்களை யுடியுப் மாதிரியான தளங்களிலும் பகிர்ந்து கொள்ள முடியும்.
5 comments:
நன்றி!!!! நான் தேடிக் கொண்டு இருந்த விடயம்
மிகவும் நன்று
நன்றி!!!!
நண்பரே, என்னுடைய ஹர்ட் டிஸ்க் வைரஸ் காரணமாக பார்மெட் செய்தபோது சிஸ்டத்தில் இருந்த சில முக்கிய பைல்களும் பார்மட் ஆகிவிட்டது அதனை திருப்பி கொண்டுவர ஏதேனும் சாப்ட்வேர் இருக்கிறதா?
பயனுள்ள மென்பொருளை அறிமுகம் செய்துள்ளீர்கள். நன்றி.
Post a Comment