பயர்பாக்ஸ், குரோமில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் டேப்

என்னதான் பயர்பாக்ஸ், குரோம், ஒபேரா என்று பாதுகாப்பான இணைய உலாவிகள் வந்துவிட்டாலும் சில இணையதளங்கள் மைக்ரோசாப்ட்டின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இணைய உலாவியில் மட்டும் செயல்படும்படி வடிவமைக்க படுகின்றன. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் மட்டும்தான் செயல்படுவேன் என்று அடம்பிடிக்கும் சில இணையதளங்களை நீங்கள் கண்டிருக்க கூடும்.

நீங்கள் இணைய பக்கங்களை வடிவமைக்கும் போது அவை அனைத்து இணைய உலாவிகளிலும் சரியாக தெரிகிறதா என்று பார்த்து வடிவமைக்க வேண்டும். நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உபயோகிக்க விரும்பாதவராக இருந்தாலும் இது போன்ற தருணங்களில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உபயோகிக்க நிர்பந்த படுத்த படுவீர்கள்.

நீங்கள் பயர்பாக்ஸ், குரோம் உபயோகிப்பாளராக இருந்தால் ஒரு சிறிய நீட்சியை நிறுவுவதன் மூலம் உங்கள் விருப்ப இணைய உலாவிகளுக்கு உள்ளேயே தனி டேப்(Tab)ஆக இன்டர்நெட் எக்ஸ்ப்லோரரை பயன்படுத்தி கொள்ள முடியும்.

மொசில்லா பயர்பாக்சில் :- பயர்பாக்சில் IE Tab நீட்சியை நிறுவ இந்த சுட்டிக்கு சென்று தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள். பயர்பாக்சில் உங்கள் விருப்ப இணைய பக்கத்தில் இருக்கும் போது IE Tab ஐகானை கிளிக் செய்தால் அந்த பக்கம் தனி டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் திறக்கும்.


கூகிள் குரோமில் :- குரோமில் IE Tab நீட்சியை நிறுவ இந்த சுட்டிக்கு சென்று தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள். இதிலும் IE Tab ஐகானை கிளிக் செய்யும் போது நீங்கள் இருந்த இணைய பக்கம் தனி டேப்பில் இண்டநெட் எக்ஸ்ப்ளோரரில் திறக்கும்.


இதன் மற்றொரு பயன் என்னவெனில், நீங்கள் ஒரு இணைய தளத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட பயனர் கணக்கு வைத்து இருக்கும் போது ஒரு பயனர் கணக்கினை உங்கள் விருப்ப இணைய உலாவி (குரோம்/பயர்பாக்ஸ்) டேப்பிலும் மற்றொரு கணக்கை இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் டேப்பிலும் திறந்து இரண்டு கணக்குகளிலும் ஒரே நேரத்தில் வேலை செய்து கொள்ள முடியும்.

உதாரணத்திற்கு நீங்கள் இரண்டு ஜிமெயில் கணக்குகள் வைத்து இருப்பதாக கொள்ளுவோம்.  இரண்டு கணக்குகளையும் தனிதனி டேப்புகளில் (Firefox Tab + IE Tab) திறந்து கொண்டு ஒரே நேரத்தில் வேலை செய்து கொள்ளலாம்.

இந்த நீட்சி உங்களுக்கு இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தேவை படும் போது அதனை தனியே ஒரு விண்டோவாக திறக்காமல் உங்கள் விருப்ப இணைய உலாவிகளின் உள்ளேயே திறந்து கொள்ள உதவுகிறது. இது இணையத்தில் உலவும் போது சில சந்தர்ப்பங்களில் தேவைப்படும்.

தொடர்புடைய இடுகைகள்

Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

2 comments:

கிரி said...

க்ரோமில் உள்ள பிரச்சனை பல வங்கி தளங்கள் சரியாக தெரிவதில்லை.. அதாவது சரியாக பயன்ப்படுத்த முடிவதில்லை.. அதற்க்கு IE அல்லது Firefox யையே நாட வேண்டியுள்ளது.

டிவிஎஸ்50 said...

ஆமாம் கிரி. அதற்கு இந்த டேப் வசதி உபயோகமாக இருக்கும்.