தமிழ்நுட்ப டிவிட்டுகள் 21-01-2010 முதல் 31-01-2010 வரை

தினமும் நிறைய தொழில்நுட்ப விசயங்களை படித்தாலும் அவை எல்லாவற்றையும் நமது இந்த வலைப்பூவில் எழுதுவது என்பது இயலாத காரியம். சில விஷயங்கள் விரிவாக எழுத முடியா வண்ணம் முக்கிய செய்திகளாக மட்டும் உள்ளன.

படிக்கும் சுவாரசியமான விசயங்களை குறுஞ்செய்திகளாக பகிர்ந்து கொள்ளலாம் என்று அவற்றை டிவிட்டரில் பதிவு செய்து வருகிறேன். எனது டிவிட்டர் முகவரி http://twitter.com/tvs50 ட்விட்டரில் பயனர் கணக்கு உள்ளவர்கள் என்னை தொடர்ந்து (Follow) என் பகிர்தல்களை உடனுக்குடன் வாசித்து கொள்ளலாம்.

நமது இந்த வலைப்பதிவிலும் வலது புறத்தில் எனது ட்விட்டர் செய்திகள் தோன்றும்படி வைத்து உள்ளேன். இங்கு தினமும் வருபவர்கள் அவற்றை வாசித்து கொள்ளலாம். ஆனால் நமது இந்த வலைப்பதிவை பெரும்பாலும் ஆர்எஸ்எஸ் (RSS) செய்தி ஓடை மூலமாகவும், மின் அஞ்சல் மூலமாகவும் வாசிப்பவர்கள் அதிகம். எண்ணிக்கையில் 1700 ஐ தாண்டி சென்று கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கும் எனது ட்விட்டர் செய்திகள் சென்றடைய வேண்டும் என்று கருதுகிறேன். எனவே வாரம் ஒரு முறை அந்த வாரத்திய என் ட்விட்டர் பகிர்தல்களை தொகுத்து இந்த வலைப்பதிவில் ஒரு இடுகையாக இடலாம் என்று நினைக்கிறேன்.

இது உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என கருதுகிறேன். அல்லது மின் அஞ்சல் மூலமாக வாசிப்பவர்களுக்கு இது தேவை இல்லாத இடுகையாக தோன்றினால் / எரிச்சலை தந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். நிறுத்தி விடலாம்.

ஜனவரி 20 2010 முதல் ஜனவரி 31 2010 வரையிலான எனது ட்விட்டர் பகிர்தல்கள்

ஆப்பிள் ஐபேட் காமெடியில் கலக்கி வருகிறது. இணையத்தில் பிரித்து மேய்கிறார்கள் http://goo.gl/Pf6O வறுக்க தனி இணையதளம் http://ifake.it/

மைக்ரோசாப்ட் புதிய பதிப்புகள் விண்டோஸ் 8, விண்டோஸ் சர்வர் 2012, ஆபீஸ் 2012 வெளியாகும் நாட்கள் 1-7-11, 2-7-12, 2-7-12 http://goo.gl/CVWy

ஐபோனுக்கு அடுத்து ஐபேடும் கலக்கப் போகிறதா? ஆப்பிள் ஐபேட்டின் நிறை குறைகளை தமிழில் அலசும் எனது இடுகை. http://goo.gl/PfoK

1500 புதிய வசதிகளுடன் கூகிள் குரோம் உலாவி புதிய பதிப்பு 4.0. நிறைய நீட்சிகள். புக்மார்க் சிங்க் குறிப்பிட வேண்டிய வசதி. http://goo.gl/NInD

மொபைல் பயனர்கள் தொலைபேசி நிறுவனங்களுக்கு எதிரான புகார்களை டிராய் இணையதளத்தில் விரைவில் பதிவு செய்யலாம். http://goo.gl/WoaY

மாணவர்கள் விண்டோஸ் 7-ஐ இலவசமாக பெற வழிமுறைகள். கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பதிப்பை மாணவர்கள் பெறலாம் http://goo.gl/2Boq

கூகிள் ஆர்க்குட்டுக்கு இன்று ஆறாவது பிறந்தநாள். ஆறு பலூனை பறக்க விட்டு சிறப்பு டூடுல் போட்டிருக்காங்க. வாழ்த்துக்கள் http://goo.gl/7p15

பிஎஸ்என்எல் தனது 3G சேவையை கோவை, ஊட்டி, குன்னூர் இடங்களுக்கு விரிவுபடுத்தி உள்ளது. வேகம் 3.1MBPS வரை? http://goo.gl/Ze0o

கூகிள் மீதான ஹேக்கர்களின் தாக்குதலுக்கு, சீனா பதில் சொல்ல வேண்டும். ஒபாமா கோரிக்கை. பிரச்சனை நீளுகிறது. http://goo.gl/v7P1

2009-ல் இணையத்தின் போக்கு எப்படி? எத்தனை இணையதளங்கள், மெயில்கள், வீடியோக்கள், கண்டம் வாரியாக பயனர்கள். புள்ளிவிபரம். http://goo.gl/Bk1D

சீன கூகிள் தாக்குதலுக்கு பயன்படுத்தப் பட்ட இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பாதுகாப்பு ஓட்டையை மைக்ரோசாப்ட் அடைத்தது. http://goo.gl/6pW4

புதிதாக வெளியாகி உள்ள பயர்பாக்ஸ் புதிய பதிப்பு 3.6 சிறப்பம்சங்கள் பற்றிய வீடியோ. முன்பை விட வேகம், Plugin மேம்பாடு. http://goo.gl/j0DN

சீன கூகிள் ஹேக்கிங். ஜெர்மனி அரசின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் புறக்கணிப்பு அறிவுரை. பயர்பாக்ஸ் தரவிறக்கங்கள் எகிறி உள்ளது. http://goo.gl/kvXR

கணினியை அசெம்பிள் செய்வது எப்படி? என்று பதிவர் மகாராஜன் வலைப்பதிவில் தொடர் எழுதி வருகிறார். புரியும்படி எளிமையாக உள்ளது. http://goo.gl/VIF2

மொபைல் சந்தையை பிடிக்க கூகிள் Vs ஆப்பிள் வியாபார போட்டி. ஐபோன்களில் கூகிள் தேடலுக்குப் பதிலாக பிங் மாற்றப் படலாம். http://bit.ly/5djrPk

புதிய பயர்பாக்ஸ் 3.6 இறுதி பதிப்பு வெளியிடப்பட்டது. பயனர்கள் அப்கிரேட் செய்யுங்கள். டேப் உபயோகத்தில் சிறு மாற்றம். http://bit.ly/6zdseE

வலைப்பதிவை அழகாக வடிவமைக்க பிளாக்கருக்கான அழகான டெம்ப்ளேட். மாதிரி வலைப்பதிவு http://goo.gl/sHN2 விபரங்களுடன் தரவிறக்க http://goo.gl/lXa6

வருங்கால தொழில்நுட்பம். அணுக எளிமை. டிஜிட்டல் சஞ்சிகை. டேப்லட் பிசி வடிவில். Mag+. புதிய கான்செப்ட். அருமையான வீடியோ. http://goo.gl/AbDk

மொபைல் இணைய உலாவி Skyfire-ன் புதிய பதிப்பு. தொடுதிரை மொபைல்களில் வேலை செய்யும். தமிழ் எழுத்துரு பிரச்சினை இல்லை. http://goo.gl/Hl40

அவாஸ்ட் ஆண்டி வைரஸ் & ஸ்பைவேர், புதிய வெர்சன் 5 வெளியிட்டுள்ளது. குறைந்த அளவு மெமரி உபயோகம். இலவச தரவிறக்க http://goo.gl/ENK7

பில்கேட்ஸ் ட்விட்டரில் டிவிட்ட ஆரம்பித்துள்ளார். அவரது முதல் டிவிட் 'Hello World' பாலோவர்கள் குவிகிறார்கள். அவரது பக்கம் http://goo.gl/hd5m

ஐபிஎல் 2010 மார்ச் முதல் ஆரம்பம். நமக்கெல்லாம் நல்ல செய்தி. இணையத்தில் நேரடி ஒளிபரப்பை யூடியுபில் காணலாம். http://goo.gl/zBj7

கூகிள் வேவ் பயன்பாடுகள் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை. சில சந்தேகங்களுக்கு பதில் இங்கே இருக்கிறது. http://goo.gl/QtI5

சீன கூகிள் ஹேக் எதிரொலி. விண்டோஸ் எக்ஸ்பி, இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 6 விட்டு புதுசுக்கு போக மைக்ரோசாப்ட் அறிவுறுத்தல் http://goo.gl/6ne5

குரோம் போன்று விண்டோஸ் 7க்குக் ஏற்ற வடிவமைப்புடன், பிரைவேட் பிரவுசிங் வசதியுடன் ஒபேரா 10.5 வெளிவந்துள்ளது. http://goo.gl/hbhZ

தொடர்புடைய இடுகைகள்



Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

7 comments:

TechShankar @ டெக்‌ஷங்கர் said...

மிக்க நன்றி தலைவா.

டிவிஎஸ்50 said...

வாங்க தமிழ்நெஞ்சம். ரொம்ப நாள் கழிச்சு இந்தப் பக்கம் வந்திருக்கீங்க. நன்றி.

Anonymous said...

niruththa vendaam thayavuseithu thodaravum. nichayamaga ubayogamaanadhu

கிரி said...

//அவர்களுக்கும் எனது ட்விட்டர் செய்திகள் சென்றடைய வேண்டும் என்று கருதுகிறேன். எனவே வாரம் ஒரு முறை அந்த வாரத்திய என் ட்விட்டர் பகிர்தல்களை தொகுத்து இந்த வலைப்பதிவில் ஒரு இடுகையாக இடலாம் என்று நினைக்கிறேன்.//



நினைக்காதீங்க செயல்படுத்துங்க! என் Twitter கணக்கு என் இடுகைகளை மற்றும் எப்பவாவது செய்திகளை பதிய மட்டுமே பயன்படுத்துகிறேன். மற்றபடி twitter ல் நான் ஏக்டிவாக இல்லை.. நீங்கள் இப்படி செய்தால் பயனுள்ளதாக இருக்கும்.

Expatguru said...

I have been closely following this blog for several months. Great work. However, please do not assume that all your readers have a Twitter account or are comfortable with it. Please continue with the existing arrangement.

டிவிஎஸ்50 said...

நன்றி கிரி, Expatguru

இவ்வாறு டிவிட்டர் செய்திகளில் ஆங்கில செய்திகளுக்கு சுட்டி கொடுப்பது சிலருக்கு பிடிக்காதோ? என்று எண்ணி இருந்தேன். உங்கள் பின்னூட்டங்களை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.

தொடர்ந்து டிவிட்டர் செய்திகளை இங்கே வாரம் ஒரு இடுகையாக பகிர்கிறேன்.

spiritual ocean said...

தங்களின் தகவல்களுக்கு நான் மனதாரப்பாராட்டி தலைவணங்குகிறேன்.இப்படிக்குwww.aanmigakkadal.blogspot.com