பிளாக்கரில் பின்னூட்டங்களை ஈமெயிலில் பெற

படைப்பாளிக்கு கைதட்டல் எப்படி ஊக்கமாக அமைகிறதோ அது போன்று வலையுலகில் பதிவர்களுக்கு பின்னூட்டங்கள் ஊக்க மருந்து. தமிழ் வலைப்பதிவுலகில் பதிவுகள் பின்னூட்டங்களால் நிரம்பி வழிவது ஆரோக்கியமான விஷயம். சில பின்னூட்டங்கள் பாராட்டும் விதமாக அமைந்தாலும் சில பின்னூட்டங்கள் நல்ல விவாதங்களை தாங்கி செல்லுகிறது. சில பதிவுகளில் இடுகைகளை விட அதற்கு வரும் பின்னூட்டங்கள் மிக சுவாரசியமாக இருக்கும்.

பின்னூட்டங்களை படிக்கவே சில வலைப்பக்கங்களுக்கு தொடர்ச்சியாக செல்வதுண்டு. சில இடுகைகளில் நாம் பின்னூட்டங்களில் பங்கேற்போம். நாம் போட்ட பின்னூட்டத்திற்கு இடுகை எழுதியவர் அல்லது பிறர் ஏதேனும் பதில் சொல்லி உள்ளார்களா என்று அறிய ஆர்வம் இருக்கும். எனவே தொடர்ச்சியாக அந்த பக்கத்திற்கு சென்று பார்த்து கொண்டு இருப்போம்.

சில இடுகைகளில் நம் சந்தேகங்களை கேட்டு இருப்போம். அங்கே நமக்கு பதில் அளித்தார்களா என்று அறிய அடிக்கடி செல்ல வேண்டி இருக்கும். நாம் கேட்கும் கேள்விக்கு ஒரு வருடம் கழித்து கூட அந்த பக்கத்திற்கு புதிதாக வரும் ஒருவர் பதில் அளிக்கலாம். தினமும் அந்த பக்கத்திற்கு சென்று பார்த்து கொண்டு இருப்பது நடைமுறையில் சாத்தியம் இல்லாத விஷயம்.



இதனை எளிமையாக்கும் வசதிதான் ஈமெயில் பாலோ-அப் (Email follow-up). பிளாக்கர் பதிவுகளில் பின்னூட்டம் இடும் போது பின்னூட்ட பேட்டியின் கீழே "Email  follow-up comments to" அல்லது "Subscribe by email" என்ற வாசகத்தை நீங்கள் கண்டிருக்க கூடும்.




பின்னூட்டம் இடும் போது அதனை நீங்கள் தேர்வு செய்து கொண்டால் அந்த இடுகைக்கு அடுத்து வரும் பின்னூட்டங்கள் உங்கள் ஈமெயிலுக்கு தானாகவே வந்து விடும். ஒவ்வொரு முறையும் அந்த பக்கத்திற்கு சென்று பாக்க வேண்டியதில்லை. எத்தனை வருடங்கள் ஆனாலும் அந்த இடுகைக்கு வரும் பின்னூட்டங்கள் உங்கள் ஈமெயிலுக்கு வரும்.

இதன் மூலம் சுவாரசியமான, ஆரோக்கியமான பின்னூட்டங்களை உங்கள் ஈமெயிலில் பெற்று கொள்ளுங்கள். Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

0 comments: