மொபைல் புகைப்படங்களை உடனுக்குடன் பிளாக்கரில் ஏற்ற

மொபைல் போன்கள் தொலைபேசுவதற்கு மட்டும் என்று இருந்த காலம் சென்று விட்டது. தற்சமயம் மொபைல்கள் கையடக்க கணினிகளாகவே மாறி விட்டன. தொலை பேச, புகைப்படம் எடுக்க, வீடியோ எடுக்க, குறிப்பெடுத்து கொள்ள, இணைய பக்கங்களை பார்க்க, மின்னஞ்சல்களை பார்க்க/அனுப்ப, இசையை ரசிக்க, வீடியோக்கள் பார்க்க, விளையாட என்று மொபைல் போன்கள் பயன்பாடுகள் விரிந்து விட்டது.

நீங்கள் செல்லும் இடங்களில் எடுக்கும் புகைப்படங்களை உடனுக்குடன் இணையத்தில் ஏற்றும் வசதி பல மொபைல் போன்களில் வந்து விட்டது. மொபைலில் நீங்கள் எடுக்கும் புகைப்படங்களை உடனுக்குடன் பிளாக்கரில் ஏற்றி மற்றவர்களுடன் பகிர்வது எப்படி? என்று பார்ப்போம்.

சில மாதங்களுக்கு முன்பு பிளாக்கரில் ஈமெயில் மூலம் பதிவிடுவது எப்படி? என்று ஒரு இடுகை எழுதி இருந்தேன். அந்த வசதியை இந்த பயன்பாட்டுக்கு உபயோகிக்கலாம். இதற்கு தேவையானவை.

1. பிளாக்கரில் ஒரு வலைப்பதிவு
2. கேமரா வசதி உள்ள மொபைல் போன்
3. மின்னஞ்சல் அனுப்ப மொபைலில் இணைய வசதி (GPRS)

உங்கள் பிளாக்கர் டாஷ்போர்டில் (Dashboard) Settings --> Email & Mobile சென்று கொள்ளுங்கள்.


அங்கே Email Posting Address என்பதில் secretWords என்பதில் உங்களுக்கு பிரத்தியேகமாக ரகசிய எழுத்துகளை கொடுத்து கொள்ளுங்கள். அந்த ஈமெயில் முகவரியை (yourname.secretwords@blogger.com) குறித்து வைத்து கொள்ளுங்கள். கீழே 'Publish emails immediately' என்பதை தேர்வு செய்து கொண்டு 'Save Settings' கிளிக் செய்து கொள்ளுங்கள். பிளாக்கரில் உங்கள் வேலை முடிந்தது.


இனி மொபைலில் புகைப்படங்கள் பகுதிக்கு சென்று கொள்ளுங்கள். அதில் படங்களை பார்க்கும் போது 'Send' என்று ஒரு வசதி இருக்கும். அதனை அழுத்தினால் ஈமெயில் மூலம் படத்தை அனுப்புவதற்கான வசதி வரும். அதன் மூலம் நீங்கள் பிளாக்கரில் இருந்து பெற்ற ரகசிய ஈமெயில் முகவரிக்கு புகைப்படத்தை அனுப்பி விடுங்கள்.

இப்போது நீங்கள் அனுப்பிய புகைப்படம் உங்கள் பிளாக்கில் ஒரு இடுகையாக தானாக பதிவிடப்பட்டு இருக்கும்.  நீங்கள் அனுப்பும் ஈமெயிலில் Subject பகுதியில் கொடுப்பது இடுகைக்கான தலைப்பாக வரும்.

 உபயோகித்து பாருங்கள். பதிவர்கள், பதிவர் சந்திப்புகளுக்கு செல்லுகிறார்கள். சுற்றுலா செல்லுகிறார்கள். அங்கே எடுக்கும் புகைப்படங்களை உடனுக்குடன் உங்கள் பிளாக்கில் இணையத்தில் ஏற்றி உலகமெங்கும் இருக்கும் நண்பர்களை சந்தோசப்படுத்தலாமே :) Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

6 comments:

அபுல் பசர் said...

தங்களின் இந்த இடுகை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இன்னும் இது போன்ற பயனுள்ள இடுகைகளை தங்களிடம் இருந்து எதிர்பார்கிறேன்

அபுல்.

சந்ரு said...

நல்ல தகவல்கள்... பகிர்வுக்கு நன்றிகள்

டிவிஎஸ்50 said...

நன்றி அபுல் பசர் தொடர்ந்து எழுத முயல்கிறேன்.

டிவிஎஸ்50 said...

நன்றி சந்த்ரு

tamilan said...

படங்கள் super
உங்கள் பதிவுகளை http://www.nilamuttram.com/ எனும் இணையத்தளத்திலும் பதிவு இட்டு எங்கள் முயற்சிக்கு கைகொடுக்கவும்//

நன்றிகள்...

Suresh Kumar said...

நல்ல தகவல் நான் சில மொபைலில் நேரடியாக பிளாக்கிற்கு அனுப்பும் வசதியும் இருக்கிறது