MP3 கோப்புகளை யூடியுபில் ஏற்றுவது எப்படி?

பாடல்கள், இசை போன்றவற்றை உயர்தரத்தில் துல்லியமாக கேட்க உதவும் கோப்பு வடிவம் MP3 ஆகும். இது கணினியில் குறைந்த இடத்தையே பிடிக்கும். பெரும்பாலான திரைப்படங்களின் பாடலை நீங்கள் யூடியுபில் கேட்டிருக்க முடியும். வீடியோவின் பின்புலத்தில் ஏதேனும் புகைப்படத்தை வைத்து கொண்டு பாடல்களை கேட்கும்படி தரவேற்றி இருப்பார்கள்.

உதாரணத்திற்கு இந்த வீடியோ சுட்டியை பாருங்கள். இது போன்று MP3 ஒலி கோப்புகளை யூடியுபில் தரவேற்றுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.

புகைப்படங்களை ஒலியுடன் கூடிய வீடியோகாக மாற்றுவது பற்றி "புகைப்படங்களை வீடியோவாக மாற்ற போட்டோ ஸ்டோரி" என்று ஒரு இடுகை எழுதி உள்ளேன். அதனை உபயோகித்து புகைப்படங்களின் பின்னணியில் MP3 கோப்பினை இணைத்து கொண்டு வீடியோவினை உருவாக்கி கொள்ளுங்கள். அந்த வீடியோவினை யூடியுபில் ஏற்றுவது மூலம் உங்கள் MP3 கோப்புகளை யூடியுபில் காணும் வேலையை செய்ய வைக்கலாம்.

மேற்கூறியது சிறந்த முறை. இதனை உபயோகித்து பாருங்கள். அதே நேரம் மற்றுமொரு வழிமுறையும் இருக்கிறது.

இந்த வேலையை எளிதாக்குவதற்கு ஒரு இணைய தளம் வழி செய்கிறது. MP32Tube என்ற தளத்திற்கு சென்று கொள்ளுங்கள். அங்கு Click here to authenticate with YouTube என்பதனை கிளிக் செய்து கொள்ளுங்கள். அடுத்து  'Authorize Access to Your Account' என்று உங்கள் யூடியுப் கணக்கில் வீடியோவை தரவேற்றி கொள்ள அந்த தளத்திற்கு அனுமதி அளிக்க கோரி யூடியுப் பக்கம் தோன்றும். அதில் 'Allow Access' கிளிக் செய்து கொள்ளுங்கள்.



அடுத்து MP3 ஆடியோ ஒலிக்கும் போது பின்னணியில் எந்த படம் தோன்ற வேண்டும் என்பதனை தேர்வு செய்து கொண்டு, ஏற்ற வேண்டிய வீடியோவை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். ஆடியோ தரவேற்ற பட சிறிது நேரம் பிடிக்கும்.



அடுத்து 'Upload to Youtube' என்பதனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.உங்கள் mp3 வெற்றிகரமாக யூடியுபில் தரவேற்ற பட்டு இருக்கும்.


தொடர்புடைய இடுகைகள்

Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

0 comments: