தமிழ் வாசிக்க தெரியாத, பேச தெரிந்தவர்கள் தமிழ் தளங்களை வாசிக்க

தமிழகத்தில் உள்ள சுதந்திர கல்வி திட்டம் தமிழில் எழுத்துகளை வாசிக்க சிரமப்படுகிற மக்களை உருவாக்கி உள்ளது. இவர்கள் யார் எனில் பள்ளி கல்வியில் முதல் மொழியாக ஹிந்தியையும், விருப்ப மொழியாக பிரெஞ்சு, ஜெர்மன், சமஸ்கிருதம் போன்ற பிற மொழிகளை தேர்ந்து எடுத்து பயின்றவர்கள்.

அனைவரும் தமிழ் மொழியில் பேசுவதால் இவர்களும் தமிழ் மொழியில் சரளமாக பேசுவார்கள். தமிழ் திரைப்படங்களை பார்த்து பரவசம் அடைவார்கள். தமிழ் தொலைக்காட்சிகளை பார்ப்பார்கள். இவர்களும் தமிழர்கள்தான். ஆனால் என்ன இவர்களால் தமிழ் மொழி எழுத்துகளை வாசிக்க இயலாது.

உதாரணமாக இவர்களிடம் "நீ எனது உயிர் நண்பன்" என்று எழுதி காட்டினால் புரியாது. "nee enathu uyir nanban" என்று ஆங்கில எழுத்துகளில் எழுதி காட்டினால் புரிந்து கொள்வார்கள். இது போன்றோரிடம் தமிழ் வலைப்பக்கங்களை காண்பித்ததால் கண்ணை கட்டி காட்டில் விட்டது மாதிரி இருக்கு என்பார்கள்.

இனி இவர்கள் கவலைப்பட தேவை இல்லை. இவர்களுக்கு என்று கூகிள் ஒரு வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. அது கூகுளின் மொழி எழுத்து மாற்றி.

http://scriptconv.googlelabs.com/ என்ற முகவரிக்கு செல்லுங்கள். நீங்கள் எழுத்து மாற்றவேண்டிய தமிழ் வாசகங்களை காப்பி செய்து அங்கே பேஸ்ட் செய்யுங்கள். 'Convert to : ' என்பதில் 'English' என்பதை தேர்ந்தெடுத்து 'Convert' என்பதனை அழுத்துங்கள்.
இப்போது நீங்கள் கொடுத்த தமிழ் எழுத்துகள், ஆங்கில எழுத்துகளாக மாறி இருக்கும். நீங்கள் அதை வாசித்து தமிழ் அர்த்தம் புரிந்து கொள்ளலாம்.

நீங்கள் ஒரு இணைய பக்கத்தை முழுமையாக எழுத்து மற்ற விரும்பினால் அங்கு மற்ற வேண்டிய இணைய பக்கத்தில் url கொடுத்து Convert to : ' என்பதில் 'English' என்பதை தேர்ந்தெடுத்து 'Convert' என்பதனை அழுத்துங்கள்.

இப்போது நீங்கள் கொடுத்த தமிழ் இணைய பக்கம் முழுதும் ஆங்கில எழுத்துகளில் மாற்றி இருக்கும்.



இந்த வசதியை தமிழ் பேச தெரிந்த (புரிந்து கொள்ள தெரிந்த) தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், நேபாளி, மராட்டி , பெங்காலி , குஜராத்தில் எழுத தெரிந்த மக்களும் உபயோகிக்கலாம். Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

13 comments:

Tech Shankar said...

புதிய தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி தலைவா

//..உதாரணமாக இவர்களிடம் "நீ எனது உயிர் நண்பன்" என்று எழுதி காட்டினால் புரியாது. "nee enathu uyir nanban" என்று ஆங்கில எழுத்துகளில் எழுதி காட்டினால் புரிந்து கொள்வார்கள். இது போன்றோரிடம் தமிழ் வலைப்பக்கங்களை காண்பித்ததால் கண்ணை கட்டி காட்டில் விட்டது மாதிரி இருக்கு என்பார்கள்.

Thiruppullani Raguveeradayal said...

நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் காண்பதிலும், படிப்பதிலும் மகிழ்ச்சி. முத்தான பதிவுகளுடன் வந்துள்ளது சந்தோஷம். ஏன் இவ்வளவு நாள் மௌனம்?

ரெட்மகி said...

வாங்க அண்ணே வாங்க...
.....
கலக்குங்க...
......

Dhavappudhalvan said...

வாவ்! புதிய தகவலிது. என்னுடைய ப்ளோக்குக்கும் அந்நிய மொழியில் சில கருத்துக்கள் வந்தது. இதை பயன்படுத்தி புரிந்துக் கொள்ள முயற்சி செய்கிறேன்.

-தவப்புதல்வன்.

http://aambalmalar.blogspot.com/

டிவிஎஸ்50 said...

மிக்க நன்றி! தமிழ்நெஞ்சம், திருதிரு, ரெட்மகி, தவப்புதல்வன் . ஆதரவிற்கு மிக்க நன்றி

TAMIL said...

good useful information

thank you tvs50

blogpaandi said...

Thanks for sharing the useful information. All the information in your blog are very useful.

puduvaisiva said...

நன்றி TVS50

புதிய தகவல் மகிழ்ச்சி

test1

nanri TVS50

puthiya thakaval makizhchi

:-)))))))))))

puduvaisiva said...

Cyclone Phyan crossed the western coast on Wednesday evening just close to Mumbai but spared the metropolis and weakened without causing any major damage.

ச்ய்ச்லோனே ப்யன் ச்ரோச்செது தி வெஸ்டர்ன் காசட் ஒன வேட்நேச்டி எவேநிங் ஜஸ்ட் க்ளோஸ் டு மும்பை பட் ச்பறேது தி மேற்றோபோளிஸ் அண்ட் வெஅகெநெட் விதௌத் காசின் எனி மேஜர் தமகே.

it is English to Tamil very hard to read.

Dear TVS50 if you know any correct site to best one English to Tamil?

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

வணக்கம்.

TamilFOSS - கட்டற்ற, திறமூல மென்பொருள்கள் குறித்த தமிழ் உதவி மன்றத்தில் பங்கு கொள்ள அழைக்கிறோம்.

நன்றி,

ரவி

டிவிஎஸ்50 said...

@புதுவை சிவா. நீங்கள் கேட்டது போன்றதொரு வசதி இன்னும் இணையத்தில் வரவில்லை. கூகிள் தான் கொண்டு வர வேண்டும். பொறுத்திருப்போம்

@ரவிஷங்கர் நன்றி ... இந்த வார இறுதியில் ஓய்வு நேரத்தில் பார்க்கிறேன்.

டெக்‌ஷங்கர் @ TechShankar said...

நெருப்புநரிக்கான புதிய நீட்சி - என்எச்எம் டிரான்ஸ்லிட்டரேசன்

உங்களது இந்தப் பதிவைப் போன்றது. ஆனால் வேற டூல் - பயன்பாடு - ஃபயர்ஃபாக்ஸ் நீட்சி.

Unknown said...

நல்ல பதிவு. இப்போது நீங்கள் அப்பப்போது சில தகவல்களை twitter இலும் தருவதாக சொன்னீர்கள். அதே நேரம் தற்போது Google BUZZ இலும் அதனை வழங்கலாமே