கணினியில் தகவல்களை பாதுகாக்க ஆண்டிவைரஸ்களில் பணி முக்கியமானது. எனவே நல்ல ஆண்டிவைரஸ் மென்பொருள்களை விலை கொடுத்து வாங்கி கணினியில் பயன்படுத்துவது நல்லது. தவறான முறையில் Crack மூலம் உடைத்து உபயோகிக்க படும் பாதுகாப்பு மென்பொருள்கள் எப்போதும் முழு பாதுகாப்பு அளிக்குமா என்பது சந்தேகமே.
பிரபல பாதுகாப்பு மென்பொருள் நிறுவனங்கள், சில நேரங்களில் சலுகையில் தனது மென்பொருள்களை வெளியிடும். இது போன்று தற்போது Mcafee நிறுவனம் தனது VirusScan® Plus என்ற மென்பொருளை ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்குகிறது.
இந்த மென்பொருள் McAfee ஆண்டிவைரஸ், McAfee பயர்வால் , McAfee ஆண்டிஸ்பைவேர் , McAfee சைட் அட்வைசர் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இதனை மூன்று கணினிகளில் நீங்கள் இலவசமாக உபயோகித்து கொள்ளலாம்.
இதனை பெற இதன் சலுகை பக்கத்திற்கு இந்த லிங்க்கை http://tinyurl.com/yaj8yzr கிளிக் செய்து செல்லவும். அங்கே 'Download Trial' என்பதனை கிளிக் செய்யவும்.
அடுத்து தோன்றும் பக்கத்தில் கேட்கப்படும் தகவல்களை அளித்து ஒரு McAfee கணக்கை திறந்து கொள்ளுங்கள்.
அடுத்த பக்கத்தில் 'Download' என்பதை கிளிக் செய்து கொண்டு தொடரும் பக்கங்களில் McAfee மென்பொருளை (DMSetup.exe) தரவிறக்கி கொள்ளவும்.
தரவிறக்கிய மென்பொருளை திறந்தால் அது உங்களிடம் உங்கள் McAfee கணக்கு விபரங்களை கேட்கும்.
சரியாக அளிக்கவும். பின்பு McAfee வைரஸ் ப்ளஸ் மென்பொருள் தரவிறங்கி உங்கள் கணினியில் நிறுவப்படும்.
இது முழுக்க McAfee நிர்வனத்திடம் இருந்து சலுகையில் கிடைப்பது. எவ்வித வில்லங்கமும் இல்லாதது. பாதுகாப்பானது.
முக்கிய குறிப்பு : இந்த சலுகை எல்லா காலங்களிலும் நடைமுறையில் இருக்காது. எவ்வளவு விரைவில் முடியுமோ கணக்கு உருவாக்கி தரவிறக்கி கொள்ளுங்கள். விரைவில் காலாவதி ஆகி விடலாம்.
5 comments:
வணக்கம் நண்பரே,
தங்களது தகவலுக்கு நன்றி. ஆனால் இந்த தொகுப்பை என்னுடைய கணினியில் install செய்து ரீஸ்டார்ட் செய்த பிறகு என்னுடைய கணினி அப்படியே hang-ஆகி நின்றுவிட்டது. இந்தத் தொகுப்பு வேணடாம் என்று uninstall செய்ய நினைத்தால் அதற்கான வாய்ப்பே இல்லை. இப்பொழுதுகூட நான் REGISTRY-யில் இத சம்பந்தப்பட்ட பைல்களை அழித்த பின்னரே எனது கணினி பழையபடி செயல்பட ஆரம்பித்துள்ளது. என்ன காரணம் என்று தெரியவில்லை. பயன்படுத்துவதற்கு முன்னர் இன்னும் சிலரை கலந்தாலோசித்தல் நல்லது. நன்றி. மேற்கொண்டு ஏதாவது தகவல் கிடைத்தால் தெரிவிக்கவும்.
அவாஸ்ட் பயன்படுத்தினேன். பிறகு மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்சியலுக்கு மாறி, தற்போது இந்தப் பதிவின் உதவியால் McAfeeக்கு மாறிட்டேன் (:-
நன்றிகளுடன்
த.நெ.
வான்முகிலன் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி. தமிழ்நெஞ்சம் இது வேலை செய்வதாக கூறி உள்ளார். நீங்கள் எந்த இயங்குதளம் உபயோகிக்கிறீர்கள்?
நன்றி தமிழ்நெஞ்சம். உங்களுக்கு உபயோகப்படும்படி பதிவு போட்டதில் இரட்டிப்பு மகிழ்ச்சி :)
நீங்கள் கூறிய அதே வழிமுறையைத் தான் பின்பற்றினேன். குறைந்தது நான்கு மணி நேரமாவது என் கணினி செயல்படாமல் போயிருந்தது.
Post a Comment