பிளாக்கரில் வோர்ட் வெரிபிகேஷனை நீக்க

வலைப்பதிவு உலகிற்கு புதிதாக வரும் எவருக்கும் ஒரு வழக்கமான பின்னூட்டம் காத்திருக்கும். இடுபவர் வேறு வேறாக இருந்தாலும் பின்னூட்டம் இதைத்தான் வலியுறுத்தும். "வோர்ட் வெரிபிகேஷனை நீக்கி விடுங்கள்'. புதிதாக வருபவர்கள் குழம்பி போவதுண்டு. அது என்ன சார் வோர்ட் வெரிபிகேஷன்?

எனது பதிவினை தொடர்ச்சியாக வாசித்து வரும் வலையுலகில் புதிய வரவான  அபுல் பசர் என்ற நண்பர் இது குறித்து கேட்டு இருந்தார். பின்னூட்டம் போடுபவர் மனிதர்தானா? என்பதை அறிந்து கொள்ளத்தான் அந்த வோர்ட் வெரிபிகேஷன். சிலர்  இணையத்தில் தானாக செயல்படும் தானியங்கி ப்ரோக்ராம்கள் (Bot) இயக்கி வருகிறார்கள்.



நீங்கள் இணையத்தில் எங்காவது விட்டு வரும் ஈமெயில் முகவரியை எடுத்து வைத்து கொண்டு அந்த முகவரிகளுக்கு வியாபார ரீதி, ஆபாச மெயில்களை அனுப்பி கொண்டு இருப்பார்கள். நமக்கு வரும் ஸ்பாம் ஈமெயில்கள் இது போன்று வருபவைதான். பெரும்பாலான மின் அஞ்சல் சேவைகள் அவற்றை தடுத்து தனியே Spam என்று ஒதுக்கி வைத்து விடுகின்றன.

அடுத்து சிலர் தானியங்கி ப்ரோக்ராம்கள் (Bot) மூலம் எங்கெல்லாம் பின்னூட்ட பெட்டி திறந்து கிடக்கிறதோ, அங்கு தானாக தங்கள் வியாபார லின்க்குடன் கூடிய பின்னூட்டங்களை இட்டு விடுவார்கள். அதன் மூலம் அவர்களுக்கு டிராபிக் வரும் என்பதுதான் இலக்கு. இதனால் பலரின் பின்னூட்டங்களில் இடுகைக்கு சம்பந்தம் இல்லாத குப்பையான பின்னூட்டங்கள் வந்து குவிந்து விடும்.

இதனை தடுப்பதற்குத்தான் பின்னூட்டம் போடுபவர் மனிதரா இல்லை தானியங்கி ப்ரோக்ராமா என அறிந்து கொள்ளத்தான் இந்த வோர்ட் வெரிபிகேஷன். பின்னூட்டம் இடும் போது சில எழுத்துகளுடன் கூடிய படத்தை காட்டி அதை டைப் செய்யும்படி கேட்கும். இதனை Captcha என்றும் அழைப்பார்கள். அதனை சரியாக கொடுத்தால் மட்டுமே பின்னூட்டம் அனுமதிக்கப்படும்.

இது ஒவ்வரு முறையும், ஒவ்வொரு நபருக்கும் மாறும். எனவே மனிதர்களால் மட்டுமே அவற்றை வசித்து சரியாக அளிக்க முடியும். தானியங்கி ப்ரோக்ராம்களால் அவற்றை சரியாக அளிக்க முடியாது. அதனால் தானியங்கி ப்ரோக்ராம்களின் பின்னூட்டம் தடுக்கப்பட்டு விடும். பின்னூட்டம் இடுபவர்களுக்கு ஒவ்வொரு முறையும் எழுத்துக்களை டைப் செய்வது சலிப்பை தந்தாலும் ஸ்பாம் தடுக்கும் விதமாக இது இன்றியமையாததாகிறது.

அதனால்தான் பெரும்பாலான தளங்களில் இதனை வைத்து இருப்பார்கள். பிளாக்கரில் புதிதாக பிளாக் ஆரம்பிக்கும் போது எல்லா பிளாக்குகளிலும் ஆரம்ப நிலையில் வோர்ட் வெரிபிகேஷன் வைத்து இருப்பார்கள். பெரும்பாலும் இப்போது தமிழ் வலைப்பதிவுகளில் யாரும் ஸ்பாம் அடிக்க துவங்கவில்லை. எனவே வோர்ட் வெரிபிகேஷன் வைத்து இருப்பது பின்னூட்டம் இடுபவர்களுக்கு பின்னடைவை தரும். பின்னூட்டம் இட தயங்குவார்கள். நமக்கு பின்னூட்டம் வருவது குறைந்து போகும்.

எனவே தான் பின்னூட்டம் இடும் நண்பர்கள் 'வோர்ட் வெரிபிகேஷன் நீக்குங்கள்' என்று கூறுவார்கள். காலம் காலமாக புதிய பதிவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அறிவுரை. இதனை எப்படி உங்கள் பிளாக்கில் நீக்குவது என்று பார்ப்போம்.

உங்கள் பிளாக்கின் டாஷ்போர்ட் சென்று கொள்ளுங்கள். அங்கே 'Settings' சென்று 'Comments' கிளிக் செய்து கொள்ளுங்கள்.



கீழிருந்து மூன்றாவதாக உள்ள 'Show word verification for comments?' என்பதில் No தேர்வு செய்து கொள்ளுங்கள்.



இப்போது 'Save Settings' செய்து கொள்ளுங்கள். இனி உங்கள் பின்னூட்ட பெட்டிகளில் வோர்ட் வெரிபிகேஷன் வராது. பின்னூட்டம் இடுபவர்களுக்கும் எளிதாக இருக்கும்.

இந்த இடுகை வலைப்பதிவுலகில் நுழையும் புதியவர்களுக்காக எழுதினேன். தெரிந்தவர்கள் அடிக்க வர வேண்டாம் :) . இனி புதியவர்களுக்கு வோர்ட் வெரிபிகேஷன் நீக்குங்கள் என்று பின்னூட்டம் இடும் போது இதன் இடுகைக்கான சுட்டியையும் இணைத்து விடுங்கள். எளிதாக புரிந்து கொள்ளவார்கள். Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

2 comments:

Unknown said...

வணக்கம்,
நண்பர் tvs 50 அவர்களே தங்களின் இடுகையை பார்த்தேன்.அதன்படி என்னுடைய ப்ளொக்கரில் வோர்ட் வெரிபிகேஷனை நீக்கி விட்டேன்.
தங்களின் விளக்கத்திற்கு என்னுடைய நன்றி.
அடுத்து ப்ளொக்கரில் சிறப்பு இடுகைகளை பிரித்து காட்டுவது எப்படி என்று தங்களின் இடுகையை படித்துவிட்டு நானும் முயற்சி பண்ணி பார்த்தேன்.சரியாக அமைய வில்லை, அதை எப்படி செய்வது.

நன்றி
அபுல்பசர்

அன்புசிவம்(Anbusivam) said...

'Word verification' என்று தமிழிஷில் தேடினேன். உங்களுடைய இடுக்கைதான் முதலில் வந்தது. நன்றி.. உங்கள் இடுக்கை எனக்கு உதவியாக இருந்தது...