கணினியில் தேவையற்ற மென்பொருள்களை நீக்க & போர்டபுள் மென்பொருள் அறிமுகம்

கோடிக்கணக்கில் குவிந்துள்ள மென்பொருள் உலகின் நாம் தினமும் நிறையமென்பொருள்கள் பற்றி கேள்வி படுகிறோம். நம் தேவைக்கு ஏற்ப நமதுகணினியில் நிறுவியும் கொள்கிறோம். இந்த பிளாக்கில் கூட நான் இலவச மென்பொருள்களை அறிமுகப்படுத்தி வருகிறேன். பெரும்பாலும் அவற்றை உபயோகித்து பார்த்து இருப்பீர்கள்.

அவை அனைத்தும் உங்கள் கணினியில் குறிப்பிட தகுந்த இடம் பிடித்து கொண்டுஇருக்கும். சில மென்பொருள்களை சோதித்து பார்க்கும் வண்ணம் நிறுவி நீக்கமறந்து இருப்போம்.
ஸ்டார்ட் மெனுவை கிளிக் செய்தால் ஒரே மென்பொருள் குவியலாக இருக்கும். அவை அனைத்தையும் தினசரி உபயோக படுத்துகிறோமா என்றால் கிடையாது. தேவையில்லாத மென்பொருள்கள்தான் அதிகம் இருக்கும்.இவ்வாறு மென்பொருள்களை மேலும் மேலும் கணினியில் அடுக்குவதுகணினியின் செயல்திறனை நிச்சயம் பாதிக்கும். மெதுவாக இயங்கலாம்.

குறிப்பிட்ட கால இடைவெளியில் கணினியில் தேங்கியுள்ள தேவையற்ற மென்பொருள்களை நீக்குவது முக்கியம். Control Panel சென்று Add or Remove Programs மூலமாக ஒவ்வொரு மென்பொருளாக கண்டறிந்து நீக்கலாம். அப்படி நீக்கினாலும் தேவையற்ற கோப்புகள் கணினியிலே தங்கி விடும் வாய்ப்புகள் அதிகம். அதிக அளவில் மென்பொருள்களை கணினியில் அடுக்கும் போது உங்கள் கணினி திணற ஆரம்பிக்கும்.

எனவே உங்கள் கணினியில் அடிக்கடி உபயோகப்படுத்தும் மென்பொருள்கள் தவிர மற்றவற்றை நீக்கி விடுங்கள்.

இதற்கென்று ஒரு இலவச மென்பொருள் கிடக்கிறது. இதனை பயன்படுத்தி உங்கள் கணினியில் உள்ள தேவையற்ற மென்பொருள்களை மொத்தமாக தேர்ந்தெடுத்து நீக்கி விடலாம். இதன் இந்த லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள். அதில் 'Batch Uninstall' என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள். பின்பு தேவையற்ற மென்பொருள்களை தேர்ந்தெடுத்து கொண்டு Uninstall Checked Programs என்பதனை கிளிக் செய்து நீக்கி கொள்ளுங்கள். இது அந்த மென்பொருள்களை எவ்வித தடயமும் இன்றி நீக்கி விடும்.


நீங்கள் எப்போதாவது உபயோகிக்கும் மென்பொருள்கள் Portable மென்பொருளாக கிடைக்கிறதா என்று தேடுங்கள். போர்டபிள் மென்பொருள் என்றால் அந்த மென்பொருளை திறக்கும் போது உங்கள் கணினியில் எந்த கோப்புகளையும் நிறுவாது. உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் தேவை இன்றி அதிக இடத்தை அடைத்து கொள்ளாது. உங்கள் கணினியின் செயல்திறனை இது எந்த விதத்திலும் பாதிக்காது.

இவற்றை நீங்கள் USB Drive, IPOD, Portable Hard Drive உள்ளிட்ட எவற்றிலும் நிறுவி கொள்ளலாம். ஏன் உங்கள் மொபைலின் மெமரியில் நிறுவி வைத்து கொண்டு நீங்கள் செல்லும் இடங்களில் உபயோகித்து கொள்ளலாம். இவற்றை இயக்க நீங்கள் உபயோகப்படுத்தும் கணினிகளில் பிரத்தியேக கூடுதல் மென்பொருள்கள் தேவை இல்லை.

இவற்றின் கூடுதல் பயன்பாடுகளை கூறுகிறேன். பயர்பாக்ஸ், குரோம் போன்ற இணைய உலாவிகளை புக்மார்க்ஸ், சேமித்த பாஸ்வோர்ட் சேதாரம் இன்றி உங்களுடன் எங்கு வேண்டுமானாலும் எடுத்து சென்று எந்த கணினியில் வேண்டுமானாலும் அங்கே பிரத்தியேகமாக நிறுவாமல் உபயோகிக்க முடியும்.

ஓபன் ஆபீஸ் மென்பொருளையே உங்களுடன் கோப்புகளுடன் எடுத்து சென்று எந்த கணினியிலும் உபயோகப்படுத்த முடியும். இது போன்று பல வசதிகள் உண்டு. மேலும் இது குறித்து அறிய இங்கே செல்லவும்.

இந்த போர்டபிள் மென்பொருள்கள் இலவசமாகவே இந்த தளத்தில் http://portableapps.com/apps கிடைக்கிறது . பயர்பாக்ஸ், குரோம், ஓபன் ஆபீஸ், VLC Media Player முதல் மிகவும் உபயோகம் உள்ள மென்பொருள்கள் போர்டபிள் ஆக கிடைக்கின்றன. வேண்டுபவற்றை தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள்.
அடிக்கடி நீங்கள் உபயோகிக்காத மென்பொருள்கள் போர்டபிள் ஆக கிடைத்தால் அவற்றையே உபயோகியுங்கள்.



மேலும் உபயோகப்படுத்தப்படாத கோப்புகளை Disk Max என்ற மென்பொருள் கொண்டு நீக்கலாம். இதுவும் இலவச மென்பொருள்தான். இதனை இங்கு சென்று தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். இது உங்கள் கணினியில் தேவை இன்றி குப்பையாக இருக்கும் கோப்புகளை கண்டறிந்து நீக்கும். மற்றும் உங்கள் கணினியின் செயல்திறனை மேம்படுத்தும். Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

3 comments:

புதுப்பாலம் said...

நல்லதொரு பதிவு

அன்புடன்
இஸ்மாயில் கனி

வனம் said...

வணக்கம்

மிகவும் உபயோகமான விடயங்கள் மற்றும் சுட்டிகள்.

சரி லினக்ஸுக்கு போர்ட்டபில் மென்பொருள்கள் எங்கு கிடைக்கும்

இராஜராஜன்

azar said...

i need redhat linux dvd where i get its free