ஜிமெயில் மின்னஞ்சல்களை பீட் ரீடரில் காண

முந்தைய இடுகை இணையதளங்களின் புதிய தகவல்களை ஈமெயிலில் பெற பதிவேற்றிய சில நிமிடங்களில் அபராஜிதன் என்பவரிடம் இருந்து ஒரு பின்னூட்டம் வந்திருந்தது.ஈமெயில் முகவரிக்கு வரும் மின்னஞ்சல்களை எப்படி பீட் ரீடரில் படிப்பது எப்படி? என்று கேட்டிருக்கிறார்.

நான் ஜிமெயில் உபயோகித்து வருகிறேன். அதனை எப்படி பீட் ரீடரில் பார்ப்பது? ஜிமெயிலில் ஒவ்வொரு முறையும் மெயில் வந்திருக்கிறதா என்று சோதிப்பதற்கு பதில், பீட் ரீடரில் இணைத்து வைத்து இருந்தால் புதிய மின்னஞ்சல் வந்திருந்தால் தானாக அறிவிப்பு காட்டும். பின்பு ஜிமெயில் உள்ளே சென்று மின்னஞ்சல்களை வாசித்து கொள்ளலாம்.

ஜிமெயில் உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களை RSS செய்தியோடையாக காணும் வசதியை வழங்குகிறது. ஜிமெயில் வழங்கும் RSS செய்தியோடைக்கான முகவரிகள்.

Inbox - https://mail.google.com/mail/feed/atom/inbox, Unread -  https://mail.google.com/mail/feed/atom/unread, All mails - https://mail.google.com/mail/feed/atom/all, Spam - https://mail.google.com/mail/feed/atom/spam, Label Based - https://mail.google.com/mail/feed/atom/LABEL NAME

இவற்றை உங்கள் பீட் ரீடரில் இணைத்து கொண்டு, உங்களுக்கு புதிதாக மின்னஞ்சல் வந்தால் அதன் அறிவிப்பை பெறலாம். இவற்றை உபயோகிக்கும் போது உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் பாஸ்வோர்ட் கேட்கும்.

இது அனைத்து பீட் ரீடரிலும் வேலை செய்வதில்லை. BottomFeeder, FeedDemon/NewsGator, NewzCrawler,  SharpReader, RSSOwl  போன்ற ரீடர்களில் வேலை செய்கிறது. குறிப்பாக பெரும்பாலானோர் பயன்படுத்தும் கூகிள் ரீடரில் இந்த வசதி வேலை செய்வதில்லை.

இதனை கூகிள் ரீடரில் வேலை செய்ய வைக்கவும் வசதியை ஒரு இணையதளம் வழங்குகிறது. FreeMyFeed.com - இந்த இணையதளத்திற்கு சென்று 'feedurl' என்பதில் மேலே சொன்ன ஜிமெயில் பீட் முகவரி ஒன்றை கொடுங்கள்.


அடுத்து 'user' -ல் உங்கள் ஜிமெயில் முகவரி, 'password' -ல் உங்கள் ஜிமெயில் பாஸ்வோர்ட். 'submit' கிளிக் செய்தால் உங்களுக்கான RSS செய்தியோடை கிடைக்கும். அதனை காப்பி செய்து உங்கள் கூகிள் ரீடரில் 'Add a Subscription' மூலம் இணைத்து கொள்ளுங்கள்.


இனி உங்கள் மின்னஞ்சலுக்கு புதிய மின்னஞ்சல்கள் வரும் போது உங்கள் பீட் ரீடரில் காட்டப்படும்.

எச்சரிக்கை : நீங்கள் பெறும் இந்த RSS முகவரியை பத்திரமாக வைத்து கொள்ளுங்கள். மற்றவருடன் பகிர்ந்தாலோ அல்லது வேறு யாரவது அறிந்து கொண்டாலோ உங்கள் ஈமெயில் தகவல்களை உங்கள் பாஸ்வோர்ட் தேவை இன்றியே, அவர்கள் முழுமையாக இல்லாவிடினும் அதன் சிலவரி அறிவிப்புகளை அறிந்து கொள்ள முடியும். Use at your own risk.

தொடர்புடைய இடுகைகள்

Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

1 comments:

Aba said...

Thank you very much for your post. All of your posts are awesome. Well. keep it up.