மொபைல்களுக்கான ஒபேரா மினி 5 பீட்டா அறிமுகம்

முன்பு மொபைல் போனில் தமிழ் இணைய பக்கங்களை பார்ப்பது எப்படி? என்று ஒரு இடுகை எழுதி இருந்தேன். மிகுந்த வரவேற்பை பெற்றது. நாம் பெரும்பாலும் ஒபேரா மினி இணைய உலாவியின் நான்காம் பதிப்பைத்தான் உபயோகித்து வருவோம். ஒபேரா இப்போது அதன் ஐந்தாம் பீட்டா பதிப்பினை வெளியிட்டு உள்ளது. இது அதிக வசதிகளுடன் மேம்படுத்த்தப் பட்டு உள்ளது.

உங்களிடம் ஒபேரா மினி பழைய பதிப்பு இருந்தால் இந்த புதிய பதிப்புக்கு மாறி கொள்ளுங்கள். இது பெரும்பாலான மொபைல்களில் நன்றாக வேலை செய்கிறது. இதனை தரவிறக்க இங்கே செல்லுங்கள்.  அதன் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

1. இது பழைய பதிப்பிலிருந்து முற்றிலும் மாற்றுபட்டது. தொடுதிரை (touchscreen) மொபைல்களை ஆதரிக்கிறது.


2. கணினி இணைய உலாவிகளை போன்று டேப்(Tabs) வசதிகளை கொண்டுள்ளதால் ஒரே நேரத்தில் பல இணைய பக்கங்களை திறந்து கொள்ள முடியும். மாறி கொள்ள முடியும்.


3. ஸ்பீட் டயல் வசதி மூலம் நாம் அடிக்கடி பார்க்கும் இணையதளங்களை முகப்பில் சேமித்து வைத்து கொண்டு அணுக முடியும்.


4. பாஸ்வேர்ட் மேனேஜர் மூலம் உங்கள் லாகின் பாஸ்வோர்ட் , பெயரையும் சேமித்து வைக்கலாம். இதன் மூலம் ஒரு இணைய பக்கத்துக்கு செல்லும் போது மீண்டும் மீண்டும் பாஸ்வோர்ட் கொடுக்க வேண்டிய தொந்தரவு இல்லை.


5. முன்பெல்லாம் மொபைலில் இணைய பக்கத்தில் உள்ள எழுத்துக்களை காப்பி செய்வது இயலாத காரியம். இப்போது இந்த பதிப்பில் அதனை செய்யலாம். இணைய பக்கத்தில் உள்ள வாசகங்களை காப்பி செய்து மற்ற மொபைல் அப்ப்ளிகேஷன்களில் பேஸ்ட் செய்து உபயோகிக்கலாம்.

இதன் பயன்பாடுகள் குறித்த இந்த வீடியோவை பாருங்கள்.



இதிலும் தமிழ் இணையபக்கங்கள் நன்றாக தெரிகின்றன. அந்த வசதியை எப்படி கொண்டு வருவது என அறிந்து கொள்ள இந்த இடுகையை பார்க்கவும்.  மொத்தத்தில் இந்த பதிப்பு மூலம் ஒபேரா தான்தான் இன்னும் மொபைல் இணைய உலாவிகள் சந்தையில் மாகாராஜா என்பதை மீண்டும் நிரூபித்து உள்ளது. மொபைலில் இணையம் உபயோகிப்பவராக இருந்தால் நீங்கள் இந்த ஒபேரா மினி பீட்டா பதிப்பை கட்டாயம் சோதித்து பாருங்கள். Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

2 comments:

புதுப்பாலம் said...

நல்ல பதிவு.

நான் SKYFIRE பயன்படுத்தி வருகிறேன்.

அப்ப ஓபரா மினி 5 பீட்டா-வை உபயோகிக்க முயல்வேன்.

அன்புடன்
இஸ்மாயில் கனி

கதிரவன் said...

தகவலுக்கு நன்றி !!